உருளை கிழங்குகள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் பொட்டாசியம் அளவு அதிகமாக நிறைந்திருப்பதால் இந்த இரு பிரச்சனைகளும் உள்ளவர்கள் இவற்றை தவிர்க்கலாம்.
இறைச்சிகளை பதப்படுத்தும்போது அதிகமாக சோடியம் சத்துள்ள பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் , சர்க்கரை நோய் உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உண்ண கூடாது.
சுவையூட்டப்பட்ட தயிரில் கொழுப்பு குறைவாக உள்ளது ஆனால் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது. எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் சுவையுள்ள தயிர்களை தவிர்க்க வேண்டும்.