வாழைப்பழம் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று. இதில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம்.
சூப்பர் ஃபுட்டான வாழைப்பழத்துடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
வாழைப்பழம் சாப்பிடும்போது எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், குமட்டல் தலைவலி ஏற்படலாம்.
வாழைப்பழத்துடன் வெண்ணெய் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரண்டிலுமே பொட்டாசியம் அதிகம் உள்ளது.
முட்டையுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தை பால் பொருட்கள் உடன் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்று உப்பிசம் ஏற்படலாம்.
வாழைப்பழத்தில் இனிப்பு நிறைத்துள்ள நிலையில், அதனுடன் இனிப்பு வகைகளை சாப்பிடுவது சர்க்கரை அளவை பெரிதும் அதிகரிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.