வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீஸ், தாமிரம் நிறைந்துள்ளது
அதிக நார்ச்சத்து நிறைந்த வெங்காயம், கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவும்.
வெங்காயம் கால்சியம் உறிஞ்சுதலை அதிகரித்து, எலும்புகளை வலுவாக்க ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த வெங்காயம், முதுமையை தடுத்து இளமையை காக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயம் நீரிழிவு நோயாகளிக்கான சிறந்த காய்கறி.
பச்சை வெங்காயம் உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்கும் சிறந்த காய்கறி.
நார்ச்சத்து நிறைந்த வெங்காயம் மலச்சிக்கல், மூல நோய் பிரச்சனையை தீர்க்க உதவும்.
செரிமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் ஆற்றல் பச்சை வெங்காயத்திற்கு உண்டு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.