நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யாப்பழம் போக்கும் நோய்கள்

Malathi Tamilselvan
Dec 20,2023
';

கொய்யாப்பழம்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள கொய்யாப்பழம் பல நோய்களை போக்குகிறது

';

நோய் எதிர்ப்பு சக்தி

கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி இயற்கையான ஆண்டிஹிஸ்டமைன் ஆகும், இது அழற்சி செயல்பாட்டின் போது வெளியிடப்படும் ஹிஸ்டமின்கள் எனப்படும் மூலக்கூறுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுவாச ஒவ்வாமைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

கண்களுக்கு நல்லது

வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக இருக்கும் கொய்யாப்பழம், கண்களை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது

';

மலச்சிக்கல்

நார்ச்சத்து பெருங்குடலைத் சுத்தம் செய்து, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் ஒன்றான கொய்யா, மலச்சிக்கலை குணப்படுத்துகிறது

';

இளமையான சருமம்

கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனால் இளமை நீண்டகாலம் நீடிக்கும். முதுமை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு நிச்சயமானது, தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால், வயதாவது தள்ளிப்போகும்

';

நீரிழிவு

நார்ச்சத்து நிறைந்ததும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதுமான கொய்யாப்பழம், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

';

ஹார்மோன்

கொய்யாவில் உள்ள தாமிரம் சத்து, ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத் தேவையான முக்கியமான கனிமமாகும். இது உங்கள் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது.

';

லைகோபீன்

கொய்யாவில் லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, இது உயிரணுக்களுக்கு ஏற்படும் நேரடி சேதத்தைத் தடுக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story