நரம்பில்லாமல் இருந்தாலும் நாக்குக்கும் சுகாதாரம் முக்கியம்! அலட்சியப்படுத்தினால் பிரச்சனை தான்! காரணங்களும் தீர்வும்!

';

நாக்கு

வாயை சுத்தம் செய்யும்போது நாக்கை சுத்தம் செய்வது அவசியம். நாக்கை பராமரிக்காவிட்டால், அதில் வெண்மையாக படலம் உருவாகிவிடும். நாக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்...

';

ஆரோக்கிய அறிகுறி

நாக்கில் வெள்ளை அடுக்கு ஏற்பட சில தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் வெள்ளை நாக்கு சில உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். நாக்கில் வெண்படலம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

';

நோயெதிர்ப்பு சக்தியின்மை

உடலின் நோய்தெரிப்பு சக்தி குறைவாக இருந்தால், வாயில் வெண்படலம் தோன்றலாம். எனவே, சத்தான உணவுகள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்

';

ஊட்டசத்து

உடல் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் உடலுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் வாயில் வெண்படலம் தோன்றலாம்

';

எலுமிச்சை மந்திரம்

நாக்கின் வெண்படலத்தை சரிசெய்ய, மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கல்ந்து நாக்கில் தடவி சிறிது நேரம் தேய்க்கவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது வெள்ளைப் படலத்தை விரைவில் குணமாக்கும்.

';

சுவை மொட்டுகள்

நாக்கில் படியும் வெண்படலமானது, சுவை மொட்டுக்களையும் மழுங்கடித்துவிடும். உப்புநீரால் கொப்பளிக்கும்போது சுவை மொட்டுகள் இயல்பாக வேலை செய்யும்

';

உப்பு நீர்

வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கவும். தினசரி இருமுறை செய்தால் வாய் சுகாதாரம் பாதுகாக்கப்படும்

';

வினிகர்

ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால், நாக்கிலிருந்து வெள்ளை அடுக்கை மிக விரைவாக போக்க முடியும்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story