மலக்குடல் சிக்கல் சீக்கிரம் சரியாக டிப்ஸ்
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு மலக்குடல் பிரச்சனையும் இருக்கும்
ஏனென்றால் கழிவுகள் சரிவர வெளியேறாத போது குடல் புண் ஏற்படும்
மலக்குடலில் புண் இருந்தால் எரிச்சல் இருக்கும், மலம் வெளியே வராது
தினம்தோறும் இந்த பிரச்சனை இருந்தால் நிச்சயம் நீங்கள் உணவு, தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும்
உங்கள் உடலுக்கு ஏற்ற அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்
உணவு எப்போதும் நார்ச்சத்து மிக்க உணவுகளாக இருக்க வேண்டும், கீரை, காய்கறி, பழங்கள் சாப்பிடவும்
மலச்சிக்கல் இருக்கும்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடவே சாப்பிட வேண்டாம்
எண்ணெய் பலகாரங்களை முழுவதுமாக தவிர்த்துவிடுங்கள், சில்லி சிக்கன் சாப்பிட வேண்டாம்
காலை மாலை சாப்பிட்ட அரைமணி நேரத்துக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுங்கள், இது செரிமானத்தை ஊக்குவிக்கும்
தினமும் தோப்புக்கரணம், வாக்கிங், ரன்னிங் செல்லுங்கள். நிச்சயம் மலச்சிக்கல் பிரச்சனை முடிவுக்கு வரும்.