காயாகவும், கனியாகவும் எப்படி பயன்படுத்தினாலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கனிகளில் முக்கியமானது பப்பாளிக்காய்
பழுத்த பப்பாளியை பழமாய் உண்பதைவிட, காயாக இருக்கும்போதே சமைத்து உண்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கினிறன. பழத்தை விட காயில் ஊட்டச்சத்தும் அதிகம், நார்ச்சத்தும் தரமானதாக இருக்கும்
பப்பாளியில் இருக்கும் தரமான நார்ச்சத்து, வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் விரைந்து அகற்றுகிறது, வயிற்றுச்சதையை குறைத்து தட்டையான வயிற்றைக் கொடுக்கிறது
பெண்களுக்கு மிகவும் நலன் பயக்கும் காய்களில் முக்கியமானது பப்பாளிக்காய். மாதவிடாய் கோளாறுகளையும், வலியையும் நீக்கும் திறன் கொண்டது பப்பாளியின் காய்...
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதுபோலவே, பப்பாளிக்காயிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது
எலும்புகளுக்கு உரம் கொடுக்கத் தேவையான சத்துக்கள் நிறைந்த பப்பாளிக்காய், மூட்டுவலி, கீல்வாதம் என எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது
வயதாகும் செயல்முறையை தள்ளிப்போட்டு, இளமையை தக்க வைக்க பப்பாளிக்காய்க்கு நிகர் அதுமட்டுமே....
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளவெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை