வேலை செல்லும் பெண்கள், நேரத்தை மிச்சப்படுத்த, ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது.
சில உணவுகளை, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து, மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர்.
கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடும். மீண்டும் சூடாக்கப்பட்ட பிறகு அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது.
பழைய சாதத்தை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
பொரித்த அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக வயிற்று வலி உண்டாகலாம்.
உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்கும் போது அதில் அரிய வகை நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஏற்படுகிறது. இது செரிமான அமைப்பில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, மீண்டும் சூடுபடுத்தும்போது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தினால், எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாக அமையும்.
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல அதிக நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.