நார்ச்சத்து மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த சியா விதைகள், உடல் எடையை குறைப்பது முதல் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவது வரை எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை அள்ளிக் கொடுக்கிறது.
எனினும் சில உணவுகளை சியா விதைகளுடன் சேர்த்து சாப்பிடுவதால், ஆரோக்கியம் பாதிக்கும்.
சோடா பானங்களுடன் சியா விதைகளை அருந்துவதால், வயிறு உப்பிசம் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் சியா விதைகளை சாப்பிடுவதால், அதன் ஆரோக்கிய நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்காது.
யோகர்ட் உடன் சியா விதைகளை அருந்துவதால், அதன் சுவை கெடுவதோடு, செரிமான பிரச்சனைகளும் ஏற்படலாம்.
அதிக சர்க்கரை சேர்த்த செயற்கைப் பழச்சாறுடன் சியா விதைகளை அருந்துவதால், அதன் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்காது.
பிற நட்ஸ் வகைகளுடன் சியா விதைகளை அருந்துவதால், செரிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படலாம்.
அதிக உப்பு சேர்த்த உணவுகளுடன் சியா விதைகளை சாப்பிடுவதால், அதன் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்காமல் போகும்.
செயற்கை இனிப்புகளுடன் சியா விதைகளை அருந்துவதால் அதன் ஊட்டச்சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
அதிக கொழுப்புள்ள பால் பொருட்களுடன் சியா விதைகளை சேர்த்து அருந்துவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.