யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் சில எளிய உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் யூரிக் அமில அளவை குறைத்து உடலில் ஏற்படும் அழற்சியையும் குறைக்கின்றன.
பச்சை காய்கறிகளில் பியூரின் அளவு குறைவாக இருப்பதால் இவை யூரிக் அமில நோயாளிகளுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றன.
ஓட்ஸ், பிரவுன் ரைஸ், கிலோவா போன்ற முழு தானியங்கள் யூரிக் அமில அளவை குறைத்து, செரிமானத்தை சீராக்கி, உடலில் உள்ள வலிகளையும் குறைக்கின்றன.
செர்ரி பழங்களில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில அளவை குறைக்கவும், அழற்சியை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் யூரிக அமில அளவை குறைக்க உதவும். இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து யூரிக் அமிலம் உடலை விட்டு வேகமாக வெளியேறுவதில் உதவி புரிகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.