சில உலர் பழங்கள் மற்றும் சில மசாலா வகைகளை இரவில் தண்ணீரில் ஊறவைப்பது அவற்றின் ஆற்றலை இரட்டிப்பாக்குகிறது. இதனால் அதிகபட்ச பலன் கிடைக்கிறது.
புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரித்து உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
கசகசா அல்லது பாப்பி விதைகள் ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். உடல் பலவீனமாகவும், மந்தமாகவும் இருந்தால், கண்டிப்பாக இந்த விதைகளை ஊற வைத்து உட்கொள்ளுங்கள்.
இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ள உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டால், உடலில் இரத்த சோகை நீங்கி, சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்.
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஊறவைத்த ஆளி விதைகளை உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது.
புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமான வெந்தயத்தை ஊற வைத்து உண்பது உடலுக்கு ஆற்றலையும் வலிமையையும் கொடுப்பதோடு, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.