ஓவர் வெயிட்டை உடனடியா குறைக்க இந்த சின்ன விதைகள் போதும்: சட்டுனு குறைக்கலாம்

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

உடல் பருமன்

உடல் பருமன் இன்றைய காலகட்டத்தில் பலரிடம் காணப்படும் பெரிய பிரச்சனையாக உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

சூப்பர் விதைகள்

தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவும் சில சூப்பர் விதைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

ஆளி விதை

ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கூடுதல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்திற்கும், மூளை ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக இருக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

சியா விதை

சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிக கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது.இது எடை இழப்பு டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய விதையாகும்.

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

பூசணி விதை

பூசணி விதையில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது நம் வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. எடை இழப்பில் இது பெரிதும் உதவுகின்றது

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

எள்

தாவரம் சார்ந்த புரதச்சத்துள்ள எள் தொப்பை கொழுப்பை கரைத்து கலோரிகளை வேகமாக எரிக்கின்றது. தினசரி உணவில் எள்ளை சேர்த்தால் மிக விரைவில் எடையை குறைக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

Published by: Sripriya Sambathkumar | Feb 27, 2024

VIEW ALL

Read Next Story