உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் அத்தகைய ஐந்து உணவுகள் குறித்த தகவல்களை இந்தக் கட்டுரையில் நாங்கள் வழங்குகிறோம்.
பருப்பு வகைகள், ராஜ்மா (kidney beans), கொண்டைக்கடலை, பனீர், முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிப்பதிலும் உடல் எடை யை குறைப்பதிலும் உதவுகின்றன.
கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் (catechins) மற்றும் காஃபின் ஆகியவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. தினமும் 1 முதல் 2 கப் கிரீன் டீ குடிப்பது கொழுப்பு எரிப்பு செயல்முறையை (fat oxidation) மேம்படுத்தும்.
சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு மற்றும் இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களில் உடல் வெப்பநிலையைச் சற்று உயர்த்தி, வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் சேர்மங்கள் உள்ளன. சிவப்பு மிளகாயில் காணப்படும் 'கேப்சாய்சின்' (capsaicin) கொழுப்பை எரிப்பதற்கு உதவும் என்று உணவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி (brown rice) மற்றும் பார்லி போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை ஜீரணிக்க அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படுவதால், வளர்சிதை மாற்றம் சுறுசுறுப்பாக இருக்கும்.
பாதாம், வால்நட், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் (flaxseeds) ஆகியவை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் சிறந்த மூலங்களாகும். இவை வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், ஹார்மோன் சமநிலையைப் பேணவும் உதவுகின்றன.