நகசுத்தி இருக்கும் இடத்தில் எலுமிச்சம் பழத்தை வைத்து சிறிது நேரம் வைக்க வேண்டும்.
ஸ்டப்பையோ காக்கஸ் என்ற பாக்டீரியா நகம் இடுக்கில் நகசுத்தியை ஏற்படுத்துகிறது.
கல் உப்பைப் பாதிக்கப்பட்ட நகசுத்தியில் வைத்து சிறிது நேரம் விட வேண்டும். பிறகு வலி குறைவதை உணர முடியும்.
மஞ்சள் மற்றும் தேங்காய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து நகசுத்தி இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வேப்ப எண்ணெய் பாதிக்கப்பட்ட நகத்தின் விரலைச் சுற்றித் தேய்த்து வர நகசுத்தி விரைவில் குணமடையும்.
மருதாணி இலை எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாக அரைத்து நகசுத்தி இருக்கும் இடத்தில் குணமாகும் வரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நகசுத்தி ஆரோக்கியமாகக் குணமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)