எலும்புகள் பலவீனமடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு வலி, எலும்பு முறிவு ஆகியவற்றின் ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன.
கால்சியம் குறைபாட்டை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சருமத்தில் கூந்தலில் நிலவும் வறட்சி, கால்சியம் குறைபாட்டை உணர்த்துகிறது.
பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவையும் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.
கால்சியம் குறைபாடு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதால், கை கால்களில் உணர்வின்மை பிரச்சனை ஏற்படலாம்.
பற்களில் ஏற்படும் வலி உள்ளிட்ட சில பிரச்சனைகள் கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாகும்.
கால்சியம் பற்றாக்குறையினால் தசைகளும் பலவீனமடையும். இதனால் தசை வலி ஏற்படலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.