உடல் ஜம்முனு இருக்க கம்முனு இந்த 7 ஜூஸை குடிங்க !!
பால் பாலில் அதிக கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளன. ஒரு கப் அளவு பாலில் 300மில்லிகிராம் கால்சியம் உள்ளன. காலை மற்றும் இரவு தூங்கும் முன்பு குடிக்கலாம்.
பாதாம் பால் பாதமில் கலோரி காணப்படுகிறது, ஒரு கப் பாதாம் பாலில் 450 மில்லி கிராம் கால்சியம் நிறைந்துள்ளன, இது உடலுக்கு நல்ல வலுவைக் கொடுத்து ஆரோக்கியமாக வைக்க உதவும்.
ஒரு கப் சோயா பாலில் பசும்பாலுக்கு இணையான கால்சியம் உள்ளது. கால்சியம் கார்பனேட்டுடன் வலுவூட்டப்பட்ட சோயா பாலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
தயிர் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இது நோய் எதிர்ப்புசக்தியின் செயல்பாட்டை மேம்படுத்தும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன.
வலுவூட்டப்பட்ட அரிசி பால் ஒரு கோப் 100 மில்லிகிராம் கால்சியம் அதிகமாக உள்ளன, வலுவூட்டப்பட்ட அரிசி பால் சிறந்த பால் மாற்றாக இருக்கும்.
கீரைகளில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் கனிமங்களை வழங்குகிறது.
சியா விதைகளில் 14% கால்சியம் உள்ளது, இது ஆரோக்கியமான எலும்பு, தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. சியா விதைகளில் பால் பொருட்களை விட இதில் அதிக கால்சியம் நிறைந்துள்ளன.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)