நீரிழிவு நோயாளிகளுக்கு உதவக்கூடிய சில வாழ்வியல் குறிப்புகளை இங்கே காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
சுகர் நோயாளிகள் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆக்டிவாக இருப்பதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் அவ்வப்போது தங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது. அளவு அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
புகைபிடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. இவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே புகைப்பிடிப்பதை தவிர்ப்ப்பது நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மருந்துகளை சாப்பிடாமல் இருப்பது ஆபத்தாக முடியலாம்.
சமச்சீரான உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக முக்கியம். குறிப்பாக இனிப்பான பொருட்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.