ஆபத்தான நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் தடுப்பூசிகள்! முதல் ஓராண்டுக்கான தடுப்பூசி பட்டியல்!

Malathi Tamilselvan
Mar 27,2024
';

தடுப்பு மருந்துகள்

வழக்கமாக பாதிகும் நோய்கள் நம்மை தாக்கி ஆரோக்கியத்தை சீர் கெடுப்பதற்கு முன்னரே தடுப்பு மருந்துகள் மூலம் உடல்நலனை பாதுகாக்கலாம். அந்த வகையில் தடுப்பு மருந்துகள், ஊசி வழியாகவும், சொட்டு மருந்தாகவும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன

';

நோய்கள்

குணப்படுத்த முடியாதவை என்று கருதப்பட்ட சில நோய்கள், தடுப்பூசிகளின் காரணமாக இப்போது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சுலபமாக நிர்வகிக்கப்படுகின்றன அதற்கு காரணம் குழந்தைகளுக்கு தடுப்பூசி கொடுப்பதே...

';

பிறந்த குழந்தை

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் பிறந்த உடனே கொடுக்கப்படுகின்றன. பிசிஜி, போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி-1 தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன

';

காசநோய் தடுப்பு

BCG தடுப்பூசி காசநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. DTwp1 தடுப்பூசி, இருமல், டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

';

HIB-1

தடுப்பூசி ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா பாக்டீரியாவால் வரும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இது, மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியாவின் அபாயத்தைக் குறைக்கிறது.

';

ரோட்டா வைரஸ் 1

ரோட்டா வைரஸ் 1 நோய்த்தடுப்பு, வயிற்றுப்போக்கு ஏற்படாமல் பாதுகாக்கும். பிசிவி 1 பல்வேறு நிமோகாக்கல் பாக்டீரியா விகாரங்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது, செப்டிசீமியா மற்றும் மார்பு தொற்று போன்ற நோய்களைத் தடுக்கிறது.

';

போலியோ சொட்டு மருந்து

இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, 6 வயது வரைபோலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

';

ஹெபடைடிஸ் பி

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்பு பூஸ்டர் ஷாட்கள் தேவைப்படுகின்றன. DTwP2, IPV 2, Rotavirus 2, Hib 2 மற்றும் PCV 2 ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது சுற்று தடுப்பூசிகள் பத்து வாரங்களில் தொடங்கும்.

';

ஹெபடைடிஸ் பி

ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஹெபடைடிஸ் பி தடுப்பூசியின் கடைசி டோஸ் மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஒன்பது மாதங்களில் MMR தடுப்பூசி கொடுக்க வேண்டும்

';

VIEW ALL

Read Next Story