கொழுப்பை குறைப்பதில், டயட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
உடல் பருமன் குறைய, இரவில் சாப்பிட கூடாத சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜீரணிக்க மிகவும் கடினமானவை. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டு வீட்டு வகை உணவுகள் உணவுகள் கொழுப்பை அதிகரிப்பதோடு, செரிமானத்தையும் பாதிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டு வீட்டு வகை உணவுகள் உணவுகள் கொழுப்பை அதிகரிப்பதோடு, செரிமானத்தையும் பாதிக்கும்.
அதிக சர்க்கரை சேர்த்த சோடா பானங்களில், சர்க்கரை மட்டும் தான் உள்ளது. ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் கிடையாது. இதை கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரிக்கும்.
அதிக சர்க்கரை கொண்ட ஐஸ்கிரீம் கேக் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதனால் உடல் எடை மளமளவென அதிகரிக்கும்.
மைதா கொண்டு செய்யப்பட்ட பிரட் பரோட்டா உள்ளிட்ட உணவுகளை தவிர்ப்பதால், உடல் பருமனை சிறப்பாக குறைக்கலாம்.
இரவு உணவினை இரவு 7 மணி அல்லது ஏழரை மணிக்குள் சாப்பிட்டு விடுவதால், உடல் பருமனை சிறப்பாக குறைக்கலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.