ஹலோ! பேசறது கேக்குதா? பிரச்சனையே இல்லாமல் ஏற்படும் ஆச்சரியமான ஆபத்து

';

செவிப்புலன்

வயதாகும் செயல்முறை, நமது செவிப்புலனை, அதாவது கேட்கும் திறனை படிப்படியாக குறைக்கும். சில நேரங்களில் ஆச்சரியமான ஆபத்துகளில் ஒன்றாக இருக்கும் இந்த பிரச்சனைக்கு காரணமாகும் விஷயங்கள் என்ன தெரியுமா?

';

காது குடைவது

காதுகளை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் குச்சிகளில் இருக்கும் பருத்தி, நமது காதில் உள்ள பாதுகாப்பு மெழுகை உள்ளே தள்ளிவிடும். இது செவிப்புலன் இழப்பை உருவாக்கும்

';

ஒலி மாசு

அளவுக்கு மேல் ஆதிக சப்தம் நமது காதுகளை சேதப்படுத்தும். தொடர்ந்து ஒலி மாசு அதிகமாக இருக்கும் இடத்தில் பணிபுரிபவர்களின் காது கேட்கும் திறன் குறைந்துவிடும்

';

மருந்துகள்

நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் செவிப்புலனை பாதிக்கின்றன. பொதுவாகவே மருந்துகளை பயன்படுத்தும்போது ஏற்படும் பக்கவிளைவுகளில் இதுவும் ஒன்று

';

சப்தம்

அளவுக்கு அதிமான சப்தம் காதுகளின் கேட்கும் திறனை சேதப்படுத்தும். இது வேலை செய்யும் இடத்தில் இருக்கும் தவிர்க்க முடியாத ஒலி மாசு அல்ல. நாம் விரும்பி கேட்கும் பாடல்களை, காதில் ஒலிவாங்கி போட்டு கேட்கும்போதும் காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது

';

நோய்கள்

சில நோய்கள் வரும்போது அவை ஏற்படுத்தும் உப நோய்களாக காது கேட்கும் திறன் குறைகிறது

';

காது மெழுகு

நமது காதை பாதுகாப்பதற்காக இருக்கும் காது மெழுகு பாதிக்கப்படும்போது காது கேட்கும் திறன் பாதிக்கப்படும்

';

ஊட்டச்சத்து குறைபாடு

வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் துத்தநாகம், மெக்னீசியம், செலினியம், அயோடின், இரும்பு, கொழுப்பு அமிலங்கள் உட்பட பல ஊட்டச்சத்து குறைபாடுகள் காது கேட்கும் திறனை பாதிக்கின்றன

';

தொற்றுகள்

உள் அல்லது வெளிப்புற காதில் ஏற்படும் தொற்றுகள் மற்றொரு காது கேளாமை ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story