பெண்களை 'சூப்பர் வுமன்' ஆக்கும் அற்புதமான உணவுகள்

';

சூப்பர்வுமன்

பெண்களுக்கு 'சூப்பர் பவர்' உண்டு. ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்வதில் வல்லுநர்களாக இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் பல கடினமான நாட்களை கடக்க வேண்டியுள்ளதுமாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், அல்லது பிந்தைய மற்றும் புரோ மெனோபாஸ் தொடர்பான பிரச்சனைகள் பெண்களுக்கு பிரத்யேகமானவை

';

பெண்கள்

ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துவது அவசியம். வலிமை தரும் சூப்பர்ஃபுட்களை உட்கொள்வதும் அவசியம். எனவே இயற்கையாகவே பெண்களை வலிமையாக்கும் சூப்பர்ஃபுட்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்

';

ஆரோக்கியம்

உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் தான் உடல் வலிமை பெறும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும், பெண்களை சூப்பர்வுமனாக மாற்றும் உணவுகள் இவை...

';

பேரீச்சம்பழம்

ஆரோக்கியத்தின் பொக்கிஷம் எனப்படும் பேரீச்சம்பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் ஆற்றலை அதிகரிக்கிறது. உடலில் இருந்து பலவீனம் மற்றும் சோம்பலை அகற்றவும் பேரீச்சம்பழம் உதவுகிறது. ஆய்வுகளின்படி, சுமார் 70 சதவீத பெண்களுக்கு அதிக வேலை இருப்பதால், தங்கள் மீது கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே பேரீச்சம்பழங்களை உட்கொள்வதால் ஊட்டச்சத்து கிடைக்கும்

';

எள்

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் எள், தசைகள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாத பித்த பிரச்சனைகளால் தொந்தரவு செய்தால், அவற்றை நீக்க எள் உங்களுக்கு உதவும். மாதவிடாய்க்கு 15 நாட்களுக்கு முன் ஒரு ஸ்பூன் வறுத்த எள்ளை உட்கொண்டால், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

';

தேங்காய்

இயற்கையாக உடலை குளுமைப்படுத்தும் தேங்காய், வாயு மற்றும் பித்த பிரச்சனைகள் நீக்கி, உடல் வலிமையைத் தருகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. தைராய்டு பிரச்சனைகளையும் தேங்காய் நீக்கும்

';

கருப்பு திராட்சை

பல நோய்களை குணப்படுத்தும். ஊறவைத்த கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் இரும்புச்சத்தும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி, இது பெண்களின் பாலியல் ஈடுபாட்டை அதிகரித்து செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

';

நெல்லிக்காய்

அனைத்து வயதினருக்கும், குறிப்பாக பெண்களுக்கு சூப்பர்ஃபுட் என்றால் அந்த பட்டியலில் முதலிடம் நெல்லிக்காய்க்கு தான். நெல்லிக்காயை எப்படி சாப்பிட்டாலும் சரி, அது உடலுக்கு நன்மையைத் தரும் சூப்பர்ஃபுட்...

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story