நாவல் பழத்தில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.
இருந்தாலும் நாவல் பழத்தை சிலர் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை யாரெல்லாம் என்பதை பார்ப்போம்.
நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இப்பழகம் ரத்த சர்க்கரை அளவை அதிகப்படியாக குறைக்கும்.
ரத்த சர்க்கரை அளவு குறையும்போது, வியர்த்தல், தலைசுற்றல், மயக்கம் ஆகியவை ஏற்படும். நாவல் பழகம் சாப்பிடும் முன் மருத்துவரை அணுகவும்
சிறுநீரகத்தில் கற்கள் உள்ள நபர்கள் நாவல் பழத்தை சாப்பிடக் கூடாது. இவை சிறுநீரில் கால்சியத்துடன் இணைந்து கற்களை உருவாக்கும் என கூறப்படுகிறது
செரிமான பிரச்னை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு நாவல் பழத்தை சாப்பிட கூடாது. இதனால், வாந்தி, அரிப்புகள், வயிறு வீக்கம் போன்றவை ஏற்படலாம்.