எலும்புகள் தசைகளை வலுவாக்கி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தானியங்கள்
இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்கும் பார்லியை கஞ்சியாக குடித்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்
நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2, இரும்புச்சத்து, போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
கால்சியத்தைத் தவிர, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு என தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன
சிறுதானியங்களிலேயே 11.8 சதவிகிதம் புரோட்டீன் கொண்டது கம்பு. கம்பில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது
கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ள வெள்ளைச்சோளம் நீரிழிவை விரைவில் கட்டுப்படுத்தும்
பைடிக் ஆசிட் சத்து, இரும்புச்சத்து, ஜின்க் கொண்ட கோதுமை பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்
புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து கொண்ட தினை, இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உதவும்
அதிக ஊட்டச்சத்து சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பைபர் உள்ளது
கிட்டதட்ட 9 வகையான அமினோ அமிலங்கள் நிறைந்த குயினோவா நீரிழிவை துரிதமாக கட்டுப்படுத்துகிறது