18 கிலோ எடை குறைத்த நடிகை ஷ்ரத்தா! 3 வேளையும் இதுதான் சாப்பிடுவாங்களாம்.. நோட் பண்ணுங்க

Weight Loss Tips For Shraddha Srinath:  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் 18 கிலோ எடை குறைத்துள்ளார். அவர் எப்படி குறைத்தார், என்னெல்லாம் சாப்பிட்டார் என்பது குறித்து பார்ப்போம். 

Written by - Umabarkavi K | Last Updated : Feb 2, 2026, 05:46 PM IST
  • 18 கிலோ எடை குறைத்த நடிகை
  • மூன்று வேளையும் டயட் தான்
  • முழு விவரம்
18 கிலோ எடை குறைத்த  நடிகை ஷ்ரத்தா! 3 வேளையும் இதுதான் சாப்பிடுவாங்களாம்.. நோட் பண்ணுங்க

Weight Loss Tips For Shraddha Srinath: உடலை கட்டுக்கோப்பாக வைக்க பலரும் பல விஷயங்களை முயற்சித்து வருகின்றனர். ஜிம், உடற்பயிற்சி,  யோகா போன்றவற்றை செய்து வருகின்றனர். மேலும், சிலர் டயட் மூலம் உடல் எடையை குறைத்து வருகின்றனர். ஆனால், உடல் எடையை குறைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. தினமும் உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் 18 கிலோ எடை குறைத்துள்ளார்.  அது எப்படி என பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

18 கிலோ எடை குறைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடல் பருமனாக இருந்து வந்த நிலையில், அவர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக டயர், உடற்பயிற்சி மூலம் 18 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். தனது எடல் எடையை குறைத்தது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அவர் கூறுகையில், "நான் உடல் பருமனோடு இருந்தேன்.  மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே உடற்பயிற்சி  செய்தேன். எதையும் யோசிக்காமல் அதிகம் சாப்பிட்டேன்.

கைகள், தொடைகளின் எடை அதிகரிப்பதே பொருட்படுத்தாமல்  நினைத்த உடையை அணிந்தேன். எந்த நேரத்திலும் நான் அழகாக இல்லை   என்று நினைத்தது இல்லை.  இருப்பினும், உடல் பருமனால் சோர்வாக இருந்தேன். புகைப்படங்களில் என்னை பார்த்த பிறகு, இந்த வயதில் இப்படி இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.  இதனை அடுத்து நான் ஜிம், நடைபயிற்சி மேற்கொண்டேன்" என்று கூறினார். 

டயட் விவரம்

மேலும், முதலில் 5 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டேன். அதன்பிறகு, 15 நிமிடங்கள், 40 நிமிடங்கள் முழுமையாக ஓட முடிந்தது. ஐந்து வருடங்கள் இதனையே தொடர்ந்து செய்தேன்.  இதனால், தான் என்னால் 18 கிலோ வரை குறைக்க முடிந்தது.  நடைபயிற்சி மட்டுமில்லாமல் ஸ்ரீநாத் உடற்பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். உணவுக் கட்டுபபாட்டிலும் அவர் இருந்தார் என்று கூறியுள்ளார். 

டயட் குறித்து பேசுகையில், என் உடலுக்கு எந்த உணவு தேவை என்பது எனக்கு நன்றாக தெரியும். அதற்கு ஏற்ற வகையில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறேன்.  அன்றாடம் இரண்டு முறை உடற்பயிற்சிகள் செய்கிறேன். மேலும், காலையில் சூடான பால், கார்ன்ஃப்ளேக்ஸ், ஆரஞ்சு பழம் சாப்பிட்டேன். மதியம் 2 சப்பாத்தி, சப்ஜி, இரவில் பிரெட், முட்டை உட்கொண்டேன் என்று கூறியுள்ளார். 

தற்போது ஒரு வாரத்தில் நான்கு முறை வலிமைக்கான உடற்பயிற்சிகள், இரண்டு முறை நடைபயிற்சி, ஒரு நாள் ஓய்வு எடுப்பதாக அவர் கூறியுள்ளார். அதேபோல, சர்க்கரை, கார்ப்ஸ் எடுக்கவே மாட்டேன் என கூறியுள்ர். சாப்பிட்டாலும் அளவாக சாப்பிட்டு வருகிறேன் என ஷ்ரத்தா கூறியுள்ளார். மேலும், தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்குவது என் உடல் எடையை குறைக்க காரணமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)  

 

மேலும் படிக்க | வேகவைத்த முட்டை Vs ஆம்லெட்! வெயிட்லாஸுக்கு எது நல்லது? மருத்துவர்கள் சொல்வது..

மேலும் படிக்க | பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன.. முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News