Weight Loss Diet Lose 5 Kgs In 1 Month : உலக அளவில் பலர் அவதிப்படும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது உடல் எடை அதிகரிப்பு. இதற்கான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு முறை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை என்ற பல காரணங்களை கூறலாம். மன அழுத்தம் கூட இதற்கு ஒரு பெருங்காரணமாக அறியப்படுகிறது. எடையை குறைக்க டீடாக்ஸ் பானங்கள் எடுப்பது, ஜிம்மிற்கு செல்வது என பல விஷயங்கள் செய்த போதிலும் சிலரது எடை குறைவதில்லை. எடையை குறைக்க டயட்டும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
உணவியல் நிபுணர்கள் கூறுவது:
உடல் எடை குறைப்பு குறித்து பேசும் உணவியல் நிபுணர்கள், எடையை இழப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்கின்றனர். மேலும், ஒரு வாரத்தில் சுமார் 500 கிராம் எடையை குறைப்பது மட்டுமே சாத்தியமென்றும், ஒரு மாதத்தில் 2-3 கிலோ வரை குறைக்கலாம் என்றும் கூறுகின்றனர். இப்படிப்பட்ட எடை இழப்பு என்பது, ஆரோக்கியமானதாகவும் இருக்குமாம்.
1 வாரத்தில் 5 கிலோ குறைக்க..
ஒரு மாதத்தில் 5 கிலோ வரை எடை குறைப்பது பற்றிய உணவு திட்டம்:
முதல் வாரம்:
முதல் வாரத்தில் காலையில் எழுந்த பின்பு வெந்தய நீரை குடிக்க வேண்டும். அதற்காக முந்தைய நாள் இரவே 2 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
காலை உணவாக 1 கப் சாம்பார், 2 இட்லி எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே, கிரீன் டீயுடன் 4 பாதாம் பருப்பை எடுத்துக்கொள்ளலாம்.
காலை சிற்றுண்டியாக 1 கப் பழங்கள், மதிய உணவாக 1 ரொட்டி, 1 கப் தால், 1 கப் காய்கறி சாலட் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மதியம் சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம்
மாலை ஸ்னாக்ஸ் ஆக முளைக்கட்டிய பாசிப்பருப்பை சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால், கேரட் சாலட் அல்லது வெள்ளரியை சாப்பிடலாம்.
இரவு 1-2 ரொட்டிகள், 1 கிண்ணம் அளவு காய்கறிகள், ஒரு கிண்ணம் கொழுப்பு இல்லாத தயிர் மற்றும் சாலட் சாப்பிடலாம்.
உறங்க செல்லும் முன் 1 டம்ளர் மஞ்சள் சேர்த்த பால் குடிக்கலாம்.
2வது வாரம்:
சியா விதைகள் மற்றும் வெந்தயம் கலந்த நீரை காலையில் அருந்தலாம்.
கிரீன் டீயுடன் 4 பாதம் எடுத்துக்கொள்ளவும்
கொய்யா அல்லது தர்பூசணியை சாப்பிடலாம்.
மதிய உணவாக 2 ரொட்டிகள், 1 கப் காய்கறி, 1 கப் தயிர், 1 கப் காய்கறி சாலட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
மாலையில் இளநீர் அல்லது தேங்காய் நீர் குடிக்கலாம்.
இரவில் 2 ரொட்டிகள், அரை கப் காளான் கிரேவி மற்றும் அரை கப் கீரை சாப்பிடலாம்.
3வது வாரம்:
இந்த வாரத்தின் முதல் நாளில், உங்கள் காலையை நெல்லிக்காய் சாறு அல்லது எலுமிச்சை நீருடன் தொடங்கவும்.
காலை பிரேக் ஃபாஸ்டாக காய்கறி ஓட்ஸ், கிரீன் டீ மற்றும் 4 பாதாம் எடுத்துக்கொள்ளலாம்.
காலை சிற்றுண்டியாக பழச்சாறு குடிக்கலாம்.
மதியம், அரை கப் சாதம், 1 ரொட்டி, 1 கப் ராஜ்மா, சாலட், ஆகியவற்றை சாப்பிடலாம்.
மாலை செர்ரி அல்லது மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.
இரவில் 1-2 ரொட்டிகள், அரை கப் தால், ஒரு கப் சாலட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
4வது வாரம்:
காலையில் எலுமிச்சை நீர் குடிக்கலாம்.
பிரேக்-ஃபாஸ்டாக அரை கப் உப்மா, கிரீன் டீ மற்றும் 2 பாதாம் சாப்பிடலாம்.
காலை சிற்றுண்டியாக செர்ரி, மாதுளை லிச்சி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மதியானத்தில் 1-2 ரொட்டி, 1 கப் காய்கறி, 1 கப் பருப்பு, அரை கப் சாலட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
மாலையில் இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர்
இரவில் 1 ரொட்டி, அரை கப் பருப்பு மற்றும் வேக வைத்த காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க காலையில் இதை செய்தால் போதும்
மேலும் படிக்க | 35 கிலோ குறைத்த நடிகை சோனம் கபூர்! தினமும் இரவு 7 மணிக்கு குடிக்கும் சூப்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ