இஞ்சி இடுப்பழகை பெற வேண்டுமா... 3 சூப்பர் வெயிட் லாஸ் பானங்கள்... நிச்சயம் ட்ரை பண்ணுங்க

Weight Loss Drinks: உடல் கொழுப்பை குறைக்கவும், தொப்பையை கரைக்கவும் சிறப்பாக உதவக்கூடிய சிறந்த வெயிட் லாஸ் பானங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 9, 2025, 07:04 PM IST
  • கொழுப்பை எரித்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.
  • செரிமான அமைப்பை மேம்படுத்தி, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, பசியை கட்டுப்படுத்துகிறது.
இஞ்சி இடுப்பழகை பெற வேண்டுமா... 3 சூப்பர் வெயிட் லாஸ் பானங்கள்... நிச்சயம் ட்ரை பண்ணுங்க

ஆரோக்கியமான வாழ்விற்கு உடல் எடையை குறைப்பது அவசியம். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், தொப்பையை குறைக்கவும், சிக்கென்ற உடல்வாகை பரவும், டயட் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில், மெட்டபாலிசத்தை தூண்டி, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த வெயிட் லாஸ் பானங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

எலுமிச்சை தேன் கலந்த பானம்

வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து அருந்துவது, பல ஆண்டுகளாக, பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் சிறந்த வெயிட் லாஸ் பானம் ஆகும். இது உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் வெளியேற்றுவது மட்டுமின்றி, கொழுப்பை எரித்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி, கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் தேனில் உள்ள இயற்கை இனிப்பு செரிமான அமைப்பை மேம்படுத்தி, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.

எலுமிச்சை தேநீர் தயாரிக்கும் முறை

தயாரிப்பதற்கு மிகவும் எளிதான வெயிட் லாஸ் பானம் இது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து அருந்த வேண்டும். இதனை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இடைவிடாமல் தொடர்ந்து, அருந்தி வந்தால் பலனை கண்கூடாக காணலாம்.

வெந்தய நீர்

வெந்தய நீர் எடையை குறைக்க உதவும் அற்புத பானம். செரிமானத்தை மேம்படுத்தி, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுவதோடு, கொழுப்பை எரிக்க சிறப்பாக செயல்படுகிறது. அதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, பசியை கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கலை போக்குவதுடன், நீரழிவு நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது.

வெந்தய நீர் தயாரிக்கும் முறை

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்து வரவும்.

இலவங்கப்பட்டை நீர்

தென்னிந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலாக்களில் இலவங்கப்பட்டையும் அடங்கும். கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த மசாலாவான இலவங்கப்பட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட நீர், மிகச் சிறந்த வெயிட் லாஸ் பானமாக இருக்கும். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஆக்ஸிஜனே ஏற்றங்கள் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்தும் ஏராளமாக உள்ளது. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் ஆற்றல் கொண்ட இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றிலும், இரவு உணவிற்கு பின்னும் அருந்துவதால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

இலவங்கப்பட்டை நீர் தயாரிக்கும் முறை

சிறிதளவு லவங்கப்பட்ட எடுத்துக் கொண்டு, முடிந்த அளவு பொடி செய்து அதனை கொதிக்கும் நீரில் போட்டு, ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின், வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வயிற்றுப் புண் முக்கிய அறிகுறிகள்..! சரி செய்வது எப்படி? முக்கிய தகவல்

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினம் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News