160 கிலோ டூ 85 கிலோ.. குறைத்தது எப்படி? ரகசியம் பகிர்ந்த 24 வயது இளைஞர்!

160 கிலோவில் இருந்து 85 கிலோவாக தனது உடல் எடையை குறைந்த 24 வயது இளைஞர், அதன் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம். 

Written by - R Balaji | Last Updated : May 11, 2025, 05:52 PM IST
  • 24 வயது இளைஞர் 75 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்
  • அதன் ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார்
160 கிலோ டூ 85 கிலோ.. குறைத்தது எப்படி? ரகசியம் பகிர்ந்த 24 வயது இளைஞர்!

நம்மில் பலர் உடல் எடையை குறைக்க நினைக்கிறோம். சிலர் நினைத்தபடி குறைக்கின்றனர். சில முயற்சி செய்து பின்னர் அதனை கைவிடுகின்றனர். இந்த நிலையில், 24 வயது நிதின் குடலோட் என்ற இளைஞர் 160 கிலோவில் இருந்து தற்போது 85 கிலோவிற்கு மாறி உள்ளார். 

விடுதியில் வசித்து படித்து வருபவர் மாணவர் நிதின் குடலோட். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 160 உடல் எடையுடன் இருந்துள்ளார். ஷூ லேஸ் கட்டுவது முதல் சிறிது தூரம் நடப்பது வரை பல விஷயங்களில் உடல் எடையால் கஷ்டத்தை அணுபவித்துள்ளார். இதனால் வருத்தமடைந்த அவர், உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து, ஒரு வருடம் கடினமாக உழைத்தார். ஜீம்மிற்கு செல்வது மட்டுமல்லாமல், உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் இருந்துள்ளார். இன்று அவர் 85 கிலோ உடல் எடையுடன் உள்ளார். 

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அந்த நேரத்தில், சிறிய வேலைகள் கூட என்னை சோர்வடையச் செய்தன. கண்ணாடியில் பார்த்தது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு 24 வயதுதான், ஆனால் நான் மிகவும் வயதானவனாக உணர்ந்தேன். இந்த வயதில் உடல் எடையை குறைக்கவில்லை என்றால் ஒருபோதும் அது முடியாது என்று எனக்கு தோன்றியது. நான் முதன்முதலில் டாக்டர் நீலிமாவிடம் பேசியபோது, ​​எனக்கு இன்னும் சந்தேகங்கள் இருந்தன. அவர் கூறினார், நீங்கள் அங்கு செல்வீர்கள், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். நான் சொல்வதை பின்தொடருங்கள் என டாக்டர் நீலிமா கூறினார். 

நான் முன்பு எல்லாவற்றையும் முயற்சித்தேன் - பழங்கள் மற்றும் தண்ணீரை மட்டுமே சாப்பிட்வது, எதுவும் நிலைக்கவில்லை, 35 கிலோ எடையை குறைத்தேன். ஆனால் அது என் தசை, முடி மற்றும் சக்தியை இழந்தது. தொடந்து முயற்சித்தேன். நான் வசிக்கும் அறையில் முட்டை மற்று கோழியை வேகவைப்பேன். தேவைப்பட்டால் சுவைக்காக விடுதியில் கொடுக்கும் கிரேவியுடன் சேர்த்து சாப்பிடுவேன். 

நான் படிக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கடினமாக உழைத்தேன். படிகளை ஏறி இறங்குவேன். அது எனக்கு நிறைய சோர்வை கொடுத்தது. ஆனால் விட்டுவிடவில்லை. உடல் எடையை குறைக்க செய்த உடற்பயிற்சிகள், உணவு முறைகள் வெறும் எண்களுக்காக மட்டுமல்ல. அது என் வாழ்க்கை முறையையே மாற்றியது. 

எனக்கு ஏற்கனவே கிடைத்த உணவுகளான ரொட்டி, முட்டை, பருப்பு, சமைத்த சாதம், ரொட்டி, மோர், கொட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை எனது பயிற்சியாளர் உறுதி செய்தார். ஆடம்பரமான பொருட்கள் இல்லாமல் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டேன் எனக் கூறி உள்ளார். 

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் நமது உணவு முறையும் முக்கியம். உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு உணவுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயங்கள் உடல் எடையை குறைக்க மிகவும் முக்கியமானது. எனவே இதனை சரியாக கடைபிடித்தால், நினைத்தபடி உடல் எடையை குறைக்க முடியும். 

மேலும் படிங்க: வெயிட் போடாமல் இருக்க மாளவிகா மோகனன் செய்வது..காலையில் குடிக்கும் பானம் காரணம்!

மேலும் படிங்க: தேங்காய் பூ சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News