Weight Loss Journey: அமெரிக்காவில் 38 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் புதிய வாழ்க்கை முறையை பின்பற்றி 45 கிலோவை குறைத்தது எப்படி என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Weight Loss Journey: மதுவும், உணவும் அதிகரித்துவிட்டதாம்
அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தைச் சேர்ந்த கோனி ஸ்டோவர்ஸ் என்ற பெண்மணி நிம்மதியான வாழ்வை மேற்கொண்டு வந்துள்ளார். அதிக சம்பளம் தரும் வேலை, கணவர் மற்றும் மகள் என அருமையான குடும்பம், அருமையான வடு என சிறப்பான வாழ்க்கை இருந்துள்ளது.
ஆனாலும் அவருக்கு சில மன கஷ்டங்கள் இருந்துள்ளன. திருமண வாழ்வில் சிக்கிவிட்டதாகவும், வேலையில் சுவாரஸ்யமின்றி இருப்பதாகவும், ஒரே இடத்தில் தேங்கிவிட்டது அவருக்கு பெரும் நெருடலாகவே இருந்துள்ளது. இதனால், அவர் மன அமைதிக்காக அதிக உணவுகளையும், மது பானத்தையும் எடுத்துக்கொள்ள தொடங்கி உள்ளார். இதனால், அவர் உடல் பருமனாகி உள்ளது. ஒருகட்டத்தில் அவர் 136 கிலோவுக்கு வந்துவிட்டாராம்.
மேலும் படிக்க | 6 நாள்களில் 4 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைக்க உதவிய Switch On டயட்!
Weight Loss Journey: கணவரையும், வேலையையும் விட்டுச் சென்ற பெண்
இதையடுத்து, அவர் 2021ஆம் ஆண்டில் மன அமைதியடைய தற்காலிக சந்தோஷத்தை தேடி செல்லாமல் நிரந்தர தீர்வு குறித்து யோசித்துள்ளார். முதலில் அவர் அவரது கணவரை விட்டு பிரிந்துள்ளார். அதன்பின், 6 இலக்க சம்பளம் வரும் வேலையையும் விட்டுள்ளார். தொடர்ந்து அவரது நீண்ட நாள் கனவாக இருந்த சுய தொழிலை தொடங்கி உள்ளார்.
இதை தொடர்ந்து, அவர் உடல் எடையையும் குறைக்க விரும்பி உள்ளார். அதையொட்டி அவர் ரோலர் ஸ்கேட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அதாவது, பல விஷயங்களை முயற்சித்து பார்த்த பின்னரே அவர் ஸ்கேட்டிங் பக்கம் வந்துள்ளார். ஸ்கேட்டிங் அவரை சுதந்திரமானவராக உணரவைத்ததாக அவரே கூறுகிறார்.
Weight Loss Journey: ஸ்கேட்டிங் மூலம் 45 கிலோவை குறைத்த பெண்
இதுகுறித்து அவர், "இது எனது புதிய வாழ்க்கையின் தொடக்கம். ஸ்கேட்டிங் என்னைக் காப்பாற்றியது. அது என்னை மீண்டும் என்னைப் போல உணர வைத்த முதல் விஷயம். அது எனக்கு சவால் விடுத்தது. அது எனது நம்பிக்கையை வளர்த்தது.
"எனது எடை அதிகமாக இருந்தபோது 297 பவுண்டுகள் (134 கிலோ) இருந்தேன். நான் கிட்டத்தட்ட 100 பவுண்டுகளை (45 கிலோ) இழந்துவிட்டேன். ஆனால் முன்னை விட நான் வலிமையாகிவிட்டேன். எனது நம்பிக்கை அதிகரித்துவிட்டது, முற்றிலும் புதிய வாழ்க்கையைப் பெற்றேன்" என்று அவள் சொன்னாள்.
உலகம் முழுவதும் வெற்றிகரமான ரியல் எஸ்டேட் வணிகத்தையும், ரோலர் ஸ்கேட்களையும் ஸ்டோவர்ஸ் செய்து வருகிறார். "மாற்றம் எந்த வயதிலும் நிகழலாம் என்று நான் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வாழ்க்கையில் எதிலும் சிக்கிக் கொள்ளவோ, தேங்கிடவோ தேவையில்லை," என்கிறார். மற்றவர்களை ஊக்குவிப்பதே தனது உண்மையான நோக்கம் என்கிறார், அவர்.
மேலும் படிக்க | 19 கிலோவை டக்குனு குறைத்த நபர்... 2025 நியூ இயர் சபதத்தில் வெற்றி - எப்படி செய்தார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









