54 கிலோவை 11 மாதங்களில் குறைத்த பெண்... உடல் எடையை அவர் கரைத்தது எப்படி?

Weight Loss Journey: அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் 11 மாதங்களில் 54 கிலோ உடல் எடையை குறைத்தது குறித்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 23, 2025, 03:50 PM IST
  • அவர் வாரத்திற்கு 1 கிலோவை குறைத்துள்ளார்.
  • கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு அவர் உடல் எடையை குறைத்துள்ளார்.
  • இதுகுறித்து அவர் X தளத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.
54 கிலோவை 11 மாதங்களில் குறைத்த பெண்... உடல் எடையை அவர் கரைத்தது எப்படி?

Weight Loss Journey: உடல் எடை குறைப்பு நடவடிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் சிறு சிறு விஷயங்களில் கூட வித்தியாசப்படலாம். ஒவ்வொருவரின் உடல்நலனும் வித்தியாசமானது என்பதே அதற்கான காரணமாகும். இருப்பினும், ஒருவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை அறிந்துகொண்டால் நிச்சயம் உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனலாம்.

Weight Loss Journey: வாரத்திற்கு 1 கிலோ

அந்த வகையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகரைச் சேர்ந்த Allyson Taft என்ற பெண்ணின் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து இங்கு காணலாம். அவர் வாரத்திற்கு சுமார் 1 கிலோவை குறைத்ததில், 11 மாதங்களில் 54 கிலோவை குறைத்துள்ளாராம். இதுகுறஇத்து அவர் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். 

Weight Loss Journey: 11 மாதங்களில் 54 கிலோ 

அந்த பதிவில் அவர் உடல் எடையை குறைப்பதற்கு முந்தைய புகைப்படத்தையும் இணைந்திருந்தார், உடல் எடையை குறைத்ததற்கு பிந்தைய புகைப்படத்தையும் இணைத்திருந்தார். அவர் 11 மாதங்களில் 54 கிலோவை எப்படி குறைத்தேன் என பலரும் தனிப்பட்ட முறையில் கேட்டு வருவதாகவும், எனவே அவர் அதுகுறித்த தகவல்களை அந்த தொடர் பதிவுகளாக பதிவிட்டிருந்தார்.

Weight Loss Journey: 6 விஷயங்களை செய்ய நினைத்த அந்த பெண்

வாழ்க்கையில் அவருக்கு இந்த 6 விஷயங்களை செய்தாக வேண்டும் என திட்டமிட்டுள்ளார். முதல் விஷயம், அவர் கவர்ச்சிகரமான தோற்றத்தை பெற வேண்டும் என நினைத்துள்ளார். இதனாலேயே அவர் உடல் எடையை குறைத்துள்ளார். இதைத் தாண்டி, மற்றவர்களை என்டர்டெயின் செய்வதற்கான திறனை வளர்த்துக்கொள்வது, சுவாரஸ்யமானவராக இருப்பது, பேச்சுத்திறனை சிறப்பாக்கிக் கொள்வது / மக்களிடையே சௌகரியமாக இருப்பது, நல்ல உடையை உடுத்துவது, ஹீல்ஸ் அணிந்து நடப்பது... இந்த 6 விஷயங்களை கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டுள்ளார்.

Weight Loss Journey: கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு...

அதிலும் கவர்ச்சிகரமாக தோற்றமளிக்க உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, பற்களை வெண்மையாக்குதல், சருமத்தை பளபளப்பாக்குவது, தலைமுடி நிறத்தை மாற்றுவது என பல்வேறு விஷயங்களை அவர் செய்துள்ளார். அதாவது, அவர் தனது வாழ்க்கைமுறையை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறார்.

Weight Loss Journey: உடல் எடையை குறைத்த பெண்

இதில், அவரின் உடல் எடை குறைப்பு குறித்து இங்கு காணலாம். அதாவது, தினமும் அவர் 8500 ஸ்டெப்ஸ் நடப்பதை வழக்கமாக வைத்திருப்பாராம். தினமும் 80 அவுன்ஸ் தண்ணீர் குடிப்பாராம். கலோரிகளை அவர் கண்காணித்தே வருவாராம். மேலும் அதில் ஒரு நாளுக்கு 1000 கலோரிகள் தேவையை விட குறைவாக சாப்பிடுவாராம். இதை தொடர்ச்சியாக செய்தே உடல் எடையை குறைத்துள்ளாராம். அதன்படி, உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் Allyson Taft பகிர்ந்த தகவல் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | ஊறவைத்த உலர் திராட்சை... உடல் பருமன் முதல் பலவீனம் வரை... பல நோய்களுக்கு அருமருந்து

மேலும் படிக்க | ஆண்களின் இடுப்பு இப்படி இருந்தால் புற்றுநோய் ஆபத்து உள்ளது? எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News