வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டே 37 கிலோவை குறைத்த பெண் - எப்படி?

Weight Loss Journey: பெண் ஒருவர் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செயல்பட்டு 37 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 26, 2025, 06:02 PM IST
  • காஷ்மி சர்மா மருத்துவர் ஆவார்.
  • அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
  • குழந்தை பிறந்த பிற்பாடு அவர் உடல் பருமனால் அவதிப்பட்டுள்ளார்.
வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டே 37 கிலோவை குறைத்த பெண் - எப்படி?

Weight Loss Journey: உடல் பருமன் என்பது தற்போது உலகளாவிய சிக்கலாக வளர்ந்துவிட்டது எனலாம். உணவுப்பழக்கத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது, குறைவான உடல் இயக்கம் ஆகியவற்றால் மோசமான வாழ்க்கைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் உடல் பருமன் பிரச்னையும் கூடவே வருகிறது.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: ஜிம்மில் சேர்ந்துவிட்டாலே எடை குறையாது...!

எனவே உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட்டு உடற்தகுதியுடன் இருக்க பலரும் உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதிலும் அதிக விலை கொண்ட உணவுகள், அதிநவீன வசதிகள் நிறைந்த ஜிம்கள் ஆகியவற்றை தேடி தேடி சென்று உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதாவது, அதிநவீன வசதிகள் நிறைந்த ஜிம்மிற்கு சென்றாலே உடல் எடையை குறைத்துவிடலாம் என நினைப்பதுதான் தவறான ஒன்றாக கூறப்படுகிறது.

Weight Loss Journey: 37 கிலோவை குறைத்த காஷ்மி சர்மா 

அந்த வகையில், மருத்துவரும், இரண்டு குழந்தைகளுக்கு தாயமுமான காஷ்மி சர்மா என்பவர் இதுபோன்ற எண்ணங்களில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதாவது, கடினமானதை செய்தால்தான் உடல் எடை குறையும் என்றில்லை, உடல் எடை குறைப்பில் மிகவும் பயனுள்ள பலன்களை தருவது மிகவும் எளிமையான விஷயங்கள்தான் என்கிறார் காஷ்மி சர்மா.

தொடர்ந்து ஒழுக்கமாக, தொடர்ச்சியாக, எளிமையாக செயலாற்றினால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம் என்கிறார் காஷ்மி சர்மா. அவர் இந்த முறையை பின்பற்றி சுமார் 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக செயல்பட்டு 37 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவர் வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவுகள் மற்றும் அவரின் அன்றாட பழக்கவழக்கங்கள் எப்படி அவரது உடல் எடை குறைப்பில் உதவியது என்பதை இங்கு காணலாம்.

Weight Loss Journey: எடை அதிகரித்த காஷ்மி சர்மா

அவரது மருத்துவ தொழிலும், இரு குழந்தைகள் உடனான வாழ்வும் அவரின் உடல் எடையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அவர் கடும் அழுத்தத்துடன் இருக்க, அவரது உடல் ஆரோக்கியம் சற்றே மோசமான நிலைக்கு போயுள்ளது. அவரது உடைகள் இருக்கமாகி உள்ளன. தொடர்ந்து சோம்பலுடன் இருந்துள்ளார். முதுகு வலி பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. போட்டோ எடுக்கவே அவருக்கு அசௌகரியமாக இருக்கும். 

அப்படியான ஒரு கட்டத்தில் காஷ்மி இணையத்தில் உடல் எடையை குறைக்க தீர்வுகளை தேடியிருக்கிறார். அதில் பலரின் அறிவுரைகள், உடல் எடை குறைப்பு கதைகள், ஊக்கமளிக்கும் பிட்னஸ் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பார்த்துள்ளனர். அதில், ஜிதேந்திர சௌக்ஸி என்பவரின் அனுபவம் அவரை அதிகம் கவர்ந்துள்ளது. உடல் எடை குறைப்பது என்பது சிக்கலானது இல்லை, எளிமையானது என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார். இதுதான் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சிறந்த நேரம் என்பதையும் காஷ்மி புரிந்துகொண்டுள்ளார்.

Weight Loss Journey: உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி...

அவர் பெரியளவில் உணவுக் கட்டுப்பாட்டையோ, உடற்பயிற்சி சாதனங்களையோ நம்பியிருக்காமல், குறைவான வீட்டில் இருந்த செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்டே உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளார். காஷ்மி அவர் உட்கொள்ளும் ஊட்டச்சத்தை கவனித்து வந்துள்ளார். அதிலும் புரதச்சத்தை எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதையும் கவனித்து வந்துள்ளார். இருப்பினும் இவர் பிட்சா, மோமோஸ், பிரியாணி, ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதையும் நிறுத்தவில்லையாம். ஒரு நாளுக்கு 45 நிமிடங்கள் - ஒருமணிநேரம் வரை மட்டும் உடற்பயிற்சி செய்வாராம். இதையே அவர் 3 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறார்.

Weight Loss Journey: நம்பிக்கையுடன் இருக்கும் காஷ்மி சர்மா

தொடர்ச்சியாக இதனை ஒழுக்கத்துடன் கடைபிடித்து வந்ததாலும், எளிமையாக செயலாற்றியதாலும், நிபுணர்களின் ஆலோசனையின்படி நடந்ததாலும், சுயமாக சமைத்து சாப்பிட்டதாலும் இந்த 3 ஆண்டுகளில் உடல் எடை குறைப்பை சாத்தியப்படுத்தியிருக்கிறார். 

மேலும், இதுகுறித்து காஷ்மி கூறுகையில், இது வெறும் எடை இழப்பு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை, இது ஒட்டுமொத்த சிந்தனையையும், புதிய பழக்கவழக்கத்தையும், நிரந்தர வாழ்க்கைமுறையையும் கொண்டுவருவது என்கிறார். தற்போது அவர் 57 கிலோவில் இருக்கிறார். அதுமட்டுமின்றி, நம்பிக்கையுடனும், மன நிறைவுடனும் இருக்கிறார் என்பதே முக்கியமானது. 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் காஷ்மி சர்மாவின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 92 கிலோவில் இருந்த பெண்... 27 கிலோவை குறைக்க உதவிய உணவுகள் என்ன?

மேலும் படிக்க | '3 மாதங்களில் 9 கிலோ' உடல் எடையை குறைக்க உதவியது என்ன? நடிகை ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!

மேலும் படிக்க | 1 வாரத்தில் 8 கிலோ குறைத்த பிரபல நடிகை! 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ‘இதை’ குடித்தாராம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News