110 கிலோவில் இருந்த பிரபல நடிகர்... 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: 110 கிலோவில் இருந்த பிரபல நடிகர் உடல் எடை குறைப்பு பயிற்சி மேற்கொண்டு 4 மாதங்களில் 32 கிலோ வரை குறைத்தாராம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 21, 2025, 06:29 AM IST
  • 15-18 வயதில் அவர் உடல் எடை குறைப்பை மேற்கொண்டாராம்.
  • Aerobics, கார்டியோ பயிற்சிகளை அவர் மேற்கொண்டாராம்.
  • 5 அடியில் இருந்து 4 மாதங்களில் 6'1" அடிக்கு வளர்ந்துவிட்டாராம்.
110 கிலோவில் இருந்த பிரபல நடிகர்... 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, தீவிர உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்டவை உடல் எடை குறைப்பின் அடிப்படையான விஷயங்கள். அதேபோல், ஒவ்வொருவருக்கும் உடல் அமைப்பு வித்தியாசப்படும். 

எனவே, உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகள், உடற்பயிற்சிகளை கைவிடுங்கள். மருத்துவ நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் உடல் எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். 

Weight Loss Journey: நடிகர் பார்த் சம்தானின் எடை குறைப்பு பயணம்

ஒருவருக்கு பயனளிக்கும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கலாம். ஆனாலும், மற்றவர்களின் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து தெரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் ஊக்கம் பெறுவீர்கள். தன்னம்பிக்கையும் ஏற்படும். அந்த வகையில், இந்தி சின்னத்திரை நடிகர் பார்த் சம்தான் என்பவர் தனது இளம் வயதில் மேற்கொண்ட உடல் எடை குறைப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது பயணத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

பார்த் சம்தானுக்கு இப்போது தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவரது நடிப்புக்கு மட்டுமின்றி இவரின் தோற்றத்திற்கும் ரசிகர்கள் ஜாஸ்தி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் நடிகனாக வேண்டும் என கனவு கண்டது குறித்தும், உடல் எடை குறைப்பு குறித்தும் என பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். 

Weight Loss Journey: 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்த நடிகர்

உடல் எடை குறைப்பு குறித்து பேசிய பார்த் சம்தான், "நான் சிறுவயதில் 110 கிலோவில் இருந்தேன். 'கபி குஷி கபி கம்' என்ற படம் நினைவிருக்கிறதா...? ரோஹித் என்ற கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருப்பாரே...? அதேபோல் தான் சிறுவயதில் நானும் குண்டாக (Chubby) இருப்பேன். சிலர் சொல்வார்கள், 'என்ன பேசுகிறாய்? நீ ஹிருத்திக் ரோஷன் போல் இருக்கிறாய்' என்று... ஆனால் அப்படியில்லை என்பது எனக்கு தெரியும். 

அப்போதுதான் நான் உடல் எடையை குறைக்க தொடங்கினேன். தொடர்ச்சியாக செயல்பட்டு வெறும் 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்தேன். அப்போது Aerobics பிரபலமாக இருந்தது. நான் நிறைய Aerobics பயிற்சிகளை மேற்கொண்டேன். ஜிம்முக்கு போகவில்லை. வெறும் ஓட்டப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவை மட்டுமே.

Weight Loss Journey: திடீரென வளர்ந்தது எப்படி...?

ஆச்சர்யப்படும் விதமாக இவற்றால் நான் வளரவும் செய்தேன். அப்போது 5 அடி இருந்த நான் 6'1" அடி உயரத்திற்கு வளர்ந்தேன், வெறும் 4-5 மாதங்களில். அப்போது எனக்கு 15-18 வயதுக்குள்தான் இருக்கும். எனவே, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி உள்ளிட்ட கார்டியா பயிற்சிகளை மேற்கொள்ளும்படி நான் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். அதுதான் எனது உயரத்திற்கு காரணம். எனது குடும்பத்தில் எல்லாரும் சராசரியாக 5'9" அல்லது 5'10" அடி இருப்பார்கள். நான் 6'1" அடி வரை வளர்ந்ததற்கு கார்டியா பயிற்சி முக்கிய காரணம். குறிப்பாக, எப்போது நான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்தேனோ அப்போதே, உடல் எடையையும் குறைக்க தொடங்கிவிட்டேன். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நடிகர் பார்த் சம்தானின் உடல் எடை குறைப்பு சார்ந்த தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் வாசகர்களாகிய நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இந்த தகவல்களை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 40 நாள்களில் 5 கிலோவை குறைத்த பெண்... ChatGPT உதவியால் எடையை குறைத்தது எப்படி?

மேலும் படிக்க | 40 கிலோ எடை அசால்டாக குறைத்த பெண்! உதவிய ஒரே ஒரு வர்க்-அவுட்..என்ன தெரியுமா?

மேலும் படிக்க | 135 கிலோவில் இருந்த நபர்... 5 மாதங்களில் 40 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News