Weight Loss Journey: பலரது உடல் எடை குறைப்பு அனுபவத்தை கேட்பது நிச்சயம் உடல் பருமனாக இருந்து உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பெரியளவில் ஊக்கம் அளிக்கும். அந்த வகையில், 26 வயதான சுபாஷிஷ் பதியின் உடல் எடை குறைப்பு அனுபவம் நிச்சயம் பலருக்கும் ஊக்கம் அளிக்கும்.
Weight Loss Journey: 104 கிலோ டூ 71 கிலோ
சுபாஷிஷ் பதி 104 கிலோவில் இருந்து 71 கிலோவை வரை உடல் எடையை குறைத்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் பதிவிட்டு வருகிறார். தனது உடல் எடை இழப்பு பயணம் முழுவதையும் அவர் புகைப்படங்களாக பதிவேற்றி வைத்துள்ளார். இதன்மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் முக்கியமாகும்.
சுபாஷிஷ் பதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு வீடியோவில்,"உடல் எடை குறைப்பின்போது, நான் அதிகமாக உணவுகளை உட்கொண்ட நாள்களும் இருந்தன, ஜிம்மிற்கு போகாத நாள்களும் இருந்தன. ஆனால், இதை கண்டு வருந்தாதீர்கள். மன விளையாட்டுதான் இது, எனவே மீண்டும் நிதானத்துடன் உடல் எடை குறைப்பு செயல்பாட்டை தொடங்குங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
Weight Loss Journey: உடல் எடையை குறைக்க என்ன செய்தார்?
தினமும் 1,600-1800 கலோரிகளை தான் உட்கொள்வாராம். மொத்தமாக இனிப்பு குடிபானத்தை அவர் தவிர்த்துவிடுவாராம். தண்ணீர் மற்றும் Coke Zero மட்டும்தான் அவர் குடிப்பாராம். சமநிலையான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வது அவருக்கு பெரியளவில் கைக்கொடுத்துள்ளது. கார்ப்போஹைட்ரேட் அளவை குறைத்து, பழங்கள், காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார். மதுபானத்தை முற்ரிலும் தவிர்த்தாராம்.
தொடர்ச்சியாக வாரத்திற்கு 4-5 முறை வெயிட் டிரெய்னிங் எடுத்துக்கொண்டு, தசைகளை வலுவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். தினமும் 12 ஆயிரம் அடிகள் நடப்பதை வழக்கமாக்கி உள்ளார். இதனால், அவருக்கு கொழுப்பு குறைந்துள்ளது, ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியமும் சீராக இருந்துள்ளது. மேலும் உடல் எடை குறைப்பு என்பது ஒரே நாள் இரவில் நடக்காது என்றும் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக செயல்பட்டால் மட்டுமே நிதானமாக ஆரோக்கியமான பலனை பெறுவீர்கள் என்றும் அவர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
Weight Loss Journey: உடல் எடையை குறைக்க உதவிய டயட் என்ன?
மேலும், 6 மாதங்களில் 34 கிலோவை குறைக்க உதவிய உணவுப்பழக்கவழக்கம் என்ன என்பது குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். காலையில், புரோட்டீன் ஷேக், இட்லி அல்லது பன்னீர் தோசை. மதிய உணவுக்கு கிரில் சிக்கன், சாதம், சாலட்கள் அல்லது சப்பாத்தி, பன்னீர்.
நொறுக்குத்தீனியாக வறுத்த மக்கானா, வெள்ளை முட்டைகள், சத்துமாவு கரைச்சல் ஆகியவற்றை அவ்வப்போது பசியெடுக்கும்போது குடிப்பாராம். இறவு உணவுக்கு சிக்கன் சாலட், ரொட்டி, கொண்டக்கடலை மசாலா ஆகியவற்றை சாப்பிடுவாராம். தூங்குவதற்கு முன் மஞ்சள் தூள் கலந்த பால் செரிமானத்திற்காகவும், நல்ல தூக்கத்திற்காகவும்...
Weight Loss Journey: வளர்ச்சிதை மாற்றத்தை தீவிரப்படுத்த...
வறுத்த உணவுகளை தவிர்த்தல், நீரேற்றமாக இருத்தல், சாப்பிட்ட பின்னர் 10-15 நிமிடங்கள் நடைப்பயிற்சி ஆகியவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் என்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சுபாஷிஷ் பதியின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 23 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்... கொழுப்பை கரைக்க உதவிய இந்த 3 விஷயங்கள்...!
மேலும் படிக்க | 54 கிலோவை குறைத்த பெண்... குழந்தை பெற்ற பின் உடல் கொழுப்பை கரைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









