Weight Loss Journey: 12 வாரங்கள் இந்த 4 விஷயங்களை பின்பற்றி உடல் எடையை குறைத்து சிறப்பான உருமாற்றத்தை அடைந்துள்ளார்.

Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது எளிதான ஒன்றுதான் என்றாலும் அது சாதாரணமானது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உணவில் கட்டுப்பாடாக இருந்து கலோரிகளை குறைவாக எடுத்துக்கொள்வதும், தீவிரமாக பயிற்சி மேற்கொள்வதும் மட்டும் உடல் எடையை குறைக்க உதவாவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் நிலையான உடல் எடை குறைப்பை வழங்கும் எனலாம்.
உங்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது, என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவை, உங்கள் தேவைக்கேற்ப எப்படி ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்கள் உடல் எடையை குறைக்க வழிவகை செய்யும் எனலாம்.
Weight Loss Journey: 12 வாரங்களில் உடல் எடை குறைப்பு
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் ஐமி கீரி, ஃபிட்னஸ் மற்றும் உடல் எடை குறைப்பு பயிற்சியாளர் ஆவார். 12 வாரங்களில் உடல் கொழுப்பை குறைப்பது எப்படி என்பது குறித்து அவர் தனது அனுபவத்தையே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில் அவர்,"12 வாரங்களில் எனது உடல் எடை குறைப்பு முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் நான் எவ்வாறு அதிகப்படுத்தினேன், நீங்களும் எவ்வாறு மாற்ற முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்" என குறிப்பிட்டிருந்தார். அவர் செய்த 4 மாற்றங்களையும் அதில் பகிர்ந்துகொண்டார்.
Weight Loss Journey: மெதுவாக சாப்பிட புதிய ஐடியா
ஐமியின் கூற்றுப்படி, சாண்ட்விச்கள் மற்றும் பேகல்கள் போன்ற உணவுகளை சாப்பிடுவதற்குப் பதிலாக, அவர் அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் பாஸ்தாவுக்கு மாறி உள்ளார். ரொட்டியை விரும்பினாலும், அத்தகைய விரைவான மதிய உணவுகளை விரைவாக சாப்பிட நேரிடும். அதனால் மேலும் பசி எடுக்கும், கூடவே ஒன்றிரண்டு நொறுக்குத்தீனிகளை சேர்த்து சாப்பிட தூண்டும்.
கத்தி மற்றும் முட்கரண்டியால் சாப்பிடக்கூடிய உணவுகளுக்கு மாறினார். இதனால், சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். குறைவான கலோரிகளை உட்கொள்ள இது மிகவும் நிறைவாக இருந்தது. இது ஒரு புத்திசாலித்தனமான மாற்றமாக அமைந்தது.
Weight Loss Journey: புரதச்சத்தில் கவனம் கொள்ளுங்கள்
புரதம் செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுக்கும், எனவே அது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவும். எனவே, காலை உணவு மற்றும் மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது 30 கிராம் புரதச்சத்தை எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் நொறுக்குத்தீனியை சாப்பிட வேண்டிய அவசியத்தை அவருக்கு குறைத்ததாம்.
Weight Loss Journey: வயிறு நிறைந்துவிடும்
காய்கறிகள் அல்லது சாலட்களுடன் கூடிய மொத்த உணவை அவர் விரும்பினாராம். ஏனெனில் இது உணவை அதிகமாக்க மிகவும் புத்திசாலித்தனமான, ஆரோக்கியமான வழியாகும். மிகக் குறைந்த கலோரிகளை உட்கொண்டு உங்கள் வயிற்றை அதிகமாக நிரப்பிக்கொள்ளலாம்.
Weight Loss Journey: கலோரிகளை குடிக்கக் கூடாதாம்
அவர் கலோரிகளை குடிப்பதை தவிர்த்துவிட்டாராம். அதாவது குடிபானங்களை அருந்த மாட்டாராம். உணவுகள் மூலமே அவர் கலோரிகளை உட்கொள்ள விரும்பி உள்ளார். இவை அனைத்தையும் சேர்த்து அவர் குறிப்பிடுவது குறைவான கலோரிகளை உட்கொள்வதே உடல் எடை குறைப்பில் நன்மையை அளிக்கும் எனலாம். இந்த விஷயங்களை பின்பற்றி, 12 வாரங்களில் அதாவது மூன்றே மாதங்களில் உடல் எடையை குறைத்து மொத்தமாக உருமாறி உள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஐமி கீரியின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ