Weight Loss Journey: உடல் எடை குறைப்பு அனுபவத்தை பலரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் பலரும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகவும் அறியப்படுகிறார்கள். அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த டல்ஸ் ஹெர்னாண்டஸ் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
Weight Loss Journey: 'உடல் பருமானை பார்த்து நானே வெறுத்தேன்'
அந்த வகையில், வரும் ஜனவரி 30ஆம் தேதி அன்று அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதில், அவர் பேசியதாவது, "எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்போது, தான் உடலை பார்த்து நானே வெறுத்தேன்" என பேசியிருந்தார். மேலும், கடுமையாக பயிற்சி எடுத்து தற்போது சிறந்த நிலைக்கு வந்திருப்பதாக அவர் பேசியிருக்கிறார்.
Weight Loss Journey: 109 கிலோவில் இருந்த பெண்...
நிச்சயதார்தத்தின் போது, டல்ஸ் ஹெர்னாண்டஸ் சுமார் 240 பவுண்டில் இருந்துள்ளார். அதாவது, 109 கிலோவில் இருந்திருக்கிறார். அவர் அப்படி உடல் பருமனோடு இருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, சுயமாக முயற்சித்து சரியான உணவை சாப்பிட்டு, உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.
Weight Loss Journey: 33 கிலோவை குறைத்தது எப்படி?
அந்த வீடியோவில் அவர் உடல் எடையை குறைப்பதற்கு முன்னர், நிச்சயதார்த்தத்தில் காலகட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. எடை தூக்குதல், கார்டியோ பயிற்சிகள், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை செய்வதையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவின் முடிவில் அவர் 33 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: வாழ்க்கை முறையை மொத்தமாக மாற்றிய பெண்
முந்தைய உடல் பருமன் நிலையை கண்டு தானே வெறுத்ததாக கூறிய அந்த பெண், தற்போதைய நிலையை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மாதத்திற்கு ஒருமுறை டயட்டில் இருப்பது என்றில்லாமல், தனது வாழ்க்கைமுறையையே தான் மாற்ற முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே உடல் எடை குறைப்பை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
Weight Loss Journey: தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் முக்கியம்
ஊட்டச்சத்தான உணவை உட்கொண்டு, உடற்பயிற்சிக்கூடத்தில் தொடர்ந்து பயிற்சி எடுப்பது உடல் எடை குறைப்புக்கு முக்கியமானதாகும் என்கிறார். மேலும் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸை கடந்துவிடுவாராம். அதையும் தவறாமல் தினமும் செய்வாராம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் டல்ஸ் ஹெர்னாண்டஸ் என்பவரின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 50 கிலோவை குறைத்த நபர் - கொழுப்பை கரைக்க உதவிய இந்த 3 காலை பழக்கங்கள்
மேலும் படிக்க | 129 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 50 கிலோவை குறைக்க உதவிய உணவுகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ