38 கிலோவை பத்தே மாசத்தில் குறைத்த பெண்... அனுபவத்தை படிங்க - நீங்களும் எடையை குறைங்க!

Weight Loss Journey: 10 மாதங்களில் 38 கிலோ உடல் எடையை குறைத்த பெண்ணின் அனுபவத்தையும், இந்த பயணத்தில் அவர் செய்த தவறுகளையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2025, 03:27 PM IST
  • அவருக்கு PCOS பிரச்னை இருந்துள்ளது.
  • ஆரம்ப கட்டத்தில் உடல் எடை குறைப்பில் பல தவறுகளை செய்துள்ளார்.
  • அதன்பின் அந்த தவறுகளை நீக்கி உள்ளார்.
38 கிலோவை பத்தே மாசத்தில் குறைத்த பெண்... அனுபவத்தை படிங்க - நீங்களும் எடையை குறைங்க!

Weight Loss Journey: "ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்... கதை இன்னும் முடியல தொடருது பாரு... என்னைக்கும் விடாமுயற்சி..." இந்த பாடல் வரிகள் யாருக்கு கைக்கொடுக்குமா இல்லையோ, உடல் எடையை குறைக்கும் மக்களுக்கு நிச்சயம் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் எனலாம்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: உடல் எடையை குறைக்கும் முன்...

விடாமுயற்சிதான் உடல் எடை குறைப்பின் அடிநாதமாக இருக்கிறது. தொடர்ச்சியான பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகியவை உங்களின் தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரும்.

சில உடல்நலப் பிரச்னைகளுடன் உடல் எடையை குறைப்பது என்பது சற்று கடினமான ஒன்றாகும். எனவே, உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டு உடல் எடை குறைப்பில் ஈடுபட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைவீர்கள்.

Weight Loss Journey: 38 கிலோவை குறைத்த சுஜாதா

இருப்பினும், பிறரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை கேட்பதாலும், அவர்கள் செய்த தவறுகளை கேட்டுக்கொண்டு அவற்றை நீங்கள் திருத்திக்கொள்ளலாம். அந்த வகையில், 10 மாதங்களில் 38 கிலோ உடல் எடையை குறைத்த சுஜாதா என்பவரின் அனுபவத்தையும், செய்த தவறுகளையும் தெரிந்துகொள்வது உங்களுக்கு பயன்அளிக்கலாம்.

அவருக்கு PCOS பிரச்னையும் இருந்த நிலையில், இவர் உடல் எடை குறைப்பில் செய்த ஒரு 10 பொதுவான தவறுகளால் உடல் எடை பெரியளவில் குறையவே இல்லையாம். தான் செய்து வந்த தவறுகள் குறித்து தனக்கு யாராவது முன்னரே சொல்லியிருந்தால் நிச்சயம் அப்போத உடல் எடை குறைந்திருக்கும் என ஒரு பதிவில் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார். எனவே, இவர் அடுத்த உடல் எடை குறைக்க வரும் PCOS பெண்களுக்கு உடல் எடை இழப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறாராம்.

Weight Loss Journey: சுஜாதா செய்த தவறுகள் என்னென்ன?

- சரியான வேளைக்கு உணவு உண்ணாமல் இருந்தது, மிக மிக குறைவான கலோரிகளை உட்கொண்டது ஆகியவை என வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கியது என்கிறார் சுஜாதா. மேலும், தசை இழப்பை ஏற்படுத்தி, நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியதாம். 

- சில உணவு வகைககளை முற்றிலும் தவிர்ப்பதாலும், குறைந்த நாள்களில் உடல் எடையை குறைக்க செய்யும் சில வழிமுறைகளாலும் அதிகம் சிரமத்திற்கு உள்ளானாராம். அப்போதைக்கு உடல் எடை குறைந்தாலும் பிற்பாடு உடனே உடல் எடை அதிகரிக்கவும் செய்தது என்கிறார் சுஜாதா.

- எப்போதும் உடல் எடை குறையுதா என பார்த்துக்கொண்டிருப்பேன். தண்ணீர் குடிப்பது, தசை வளர்ச்சி, ஹார்மோன்கள் சுரப்பது ஆகியவற்றின் அடிப்படையில் உடல் எடையின் ஏற்ற இறக்கத்தில் இருக்கும். எனவே, அதில் அதிக கவனம் செலுத்தி மன உளச்சலுக்கு ஆளாக வேண்டாம்.

- குறைவான புரதச்சத்தை எடுத்துவந்ததால் சரியான பலன் முதலில் கிடைக்கவில்லை என்கிறார் சுஜாதா. எனவே புரதச்சத்தை போதியளவு எடுத்துக்கொள்வது தசை வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். 

- அதேபோல், Strength உடற்பயிற்சிகளை முற்றிலும் தவிர்த்து அதிகமான Cardio மட்டும் செய்வதும் தவறாராம், இது தசை இழப்பை ஏற்படுத்தியதாம். தசையை வளர்ச்சி அடைய செய்தால்தான் வளர்ச்சிதை மாற்றம் தீவிரமாகி, கொழுப்பும் குறையும் என்கிறார்.

- நட்ஸ், விதைகள், அவகாடோ, ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதும் ஹோர்மோன்களை சீராக இருக்கவிடாமல் தடுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுக்கும் என்கிறார் சுஜாதா.

- குறைவான தண்ணீர் குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் தீவிரமடையாமல் போவது, நொறுக்குத்தீனிகளை கவனமின்றி சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்திருப்பதால் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வது, சரியாக தூங்காமல் இருப்பது, மன உளச்சலுடன் இருப்பதும் தான் செய்த பெரிய தவறுகள் என்கிறார் சுஜாதா.

( பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சுஜாதாவின் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 54 கிலோவை குறைத்த பெண்... குழந்தை பெற்ற பின் உடல் கொழுப்பை கரைத்தது எப்படி?

மேலும் படிக்க | 23 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... PCOS இருந்தும் குறைத்தது எப்படி?

மேலும் படிக்க | 36 வயதில் 37 கிலோவை குறைத்த பெண்; கொழுப்பை கரைக்க செய்தவை என்ன?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News