ஜிம்முக்கு போகாத பெண்... 30 கிலோவை 8 மாதங்களில் குறைக்க உதவிய இந்த 13 உணவுகள்

Weight Loss Journey: பெண் ஒருவர் ஜிம்மிற்கு போகாமல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டே 8 மாதங்களில் 30 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.        

Written by - Sudharsan G | Last Updated : Mar 20, 2025, 02:57 PM IST
  • ஆரோக்கியமான வாழ்கை முறையை பின்பற்றி வருகிறார்.
  • நிதானமாக உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளார்.
  • இவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.
ஜிம்முக்கு போகாத பெண்... 30 கிலோவை 8 மாதங்களில் குறைக்க உதவிய இந்த 13 உணவுகள்

Weight Loss Journey: உடல் எடை குறைப்பில் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான உடற்பயிற்சி எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு கட்டுப்பாடான உணவுப்பழக்கவழக்கமும் முக்கியமானதாகும்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 8 மாதங்களில் 30 கிலோவை குறைத்த பெண்

நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை குறையும் என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள் எனலாம். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பிரபலமான உதித்தா அகர்வால் என்பவர், ஜிம்மிற்கு போகாமலேயே  ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டே 8 மாதங்களில் 30 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம்.

Weight Loss Journey: உடல் எடை குறைப்புக்கு உதவிய 13 உணவுகள்

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில் அவருக்கு உடல் எடையை குறைக்க உதவிய 13 உணவுகளை குறிப்பிட்டிருந்தார். அவை என்னென்ன என்பதை இங்கு வரிசையாக காணலாம்.

- காலிஃபிளவர்: குறைந்த கலோரி கொண்ட இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 100 கிராம் காலிஃபிளவரில் 25 கலோரிகளே இருக்கும்.

- ஆப்பிள்: அதிக கலோரிகள் கொண்ட இது உங்களின் பசியை கட்டுப்படுத்தும். 100 கிராம் ஆப்பிளில் 52 கலோரிகள் உள்ளன.

- சர்க்கரை வள்ளிக்கிழங்கு: அதிக பொட்டாஸியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இதை நீங்கள் அவித்தோ, சுட்டோ சாப்பிடலாம். அவித்த 100 கிராம் கிழங்கில் 77 கலோரிகள் இருக்கிறது. 

- மோர்: குறைந்த கலோரி மற்றும் அதிக புரதச்சத்து கொண்டது. 100 கிராமில் 40 கலோரி இருக்கிறது. 

- டோஃபு: அதிக புரதச்சத்து மற்றும் குறைந்த கலோரி. 100 கிராம் டோஃபுவில் 76 கலோரிகள் இருக்கிறது. 

- நட்ஸ்: ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது, ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. 100 கிராம் நட்ஸில் 550-600 கலோரிகள் இருக்கின்றன. 

-  டார்க் சாக்லேட்: ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கிறது. உங்களுக்கு இனிப்பு சாப்பிடும் ஆசை அதிகமானால் இதனை எடுத்துக்கொள்ளலாம். 100 கிராமில் 546 கலோரிகள் இருக்கின்றன. 

- பீன்ஸ் மற்றும் பருப்புகள்: அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளன. இவற்றில் 100 கிராமில் 333 கலோரிகள் இருக்கின்றன. 

- தர்ப்பூசணி: அதிக நீர்ச்சத்து இருக்கிறது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதில் 100 கிராமில் 30 கலோரிகளே உள்ளன. 

- பப்பாளி: குறைந்த கலோரிகள் கொண்டது. செரிமானத்திற்கு உதவும். 100 கிராமில் 43 கலோரிகள் உள்ளன. 

- இளநீர்: குறைந்த கலோரி கொண்டது. நீர்ச்சத்து நிறைந்தது. எலக்ட்ரோலைட்ஸ் அதிகம் உள்ளன. 100 கிராமில் 19 கலோரிகள் உள்ளன.

- வறுத்த கொண்டைக்கடலை: புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கின்றன. இது உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். 100 கிராம் சென்னாவில் 390 கலோரிகள் இருக்கின்றன.

- பாப்கார்ன்: வெண்ணெய் சேர்க்காத இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரியும் இருக்கும். அதாவது, 100 கிராமில் 380 கலோரிகள் இருக்கின்றன. 

Weight Loss Journey: உதித்தா அகர்வாலின் மற்ற பழக்கவழக்கங்கள்

இந்த 13 உணவுகளுடன் அவர் அளவாக சாதத்தையும் எடுத்துக்கொண்டுள்ளார், இதனை அவர் ஒரு மாதக்காலத்திற்கு பின்பற்றிய போதே உடல் எடை குறைந்துள்ளது. முதன்முதலில் அவரது முகத்திலேயே மாற்றம் தெரிந்திருக்கிறது என்கிறார். 

இதனை தவிர இடைவிடாத உண்ணாவிரதம் ( Intermittent Fasting), தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது, நச்சுகளை வெளியேற்ற உதவும் பானங்களை குடிப்பது, ஒட்டுமொத்தமாக உணவுகளில் சர்க்கரையை தவிர்த்தது என பல்வேறு பழக்கவழக்கங்களை பின்பற்றி உள்ளார். 

ஜிம்மிற்கு போகாமலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவை மூலமும் உடல் எடையை குறைக்கலாம் என்கிறார் உதித்தா அகர்வால். இருப்பினும், ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ரிசல்டும் வேறுபடலாம் என்கிறார்.  

(பொறுப்பு துறப்பு: உதித்தா அகர்வாலின் தனிப்பட்ட அனுபவமே இது. இதனை பின்பற்றும் முன் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 109 கிலோவில் இருந்த பெண்... 33 கிலோ உடல் எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா?

மேலும் படிக்க | 50 கிலோவை குறைத்த நபர் - கொழுப்பை கரைக்க உதவிய இந்த 3 காலை பழக்கங்கள்

மேலும் படிக்க | 130 கிலோவில் இருந்து 74 கிலோவுக்கு வந்த பெண்... கொழுப்பை கரைத்த அந்த ஒரே ஒரு பழக்கம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News