Weight Loss Journey: வித்தியாசமான நடைபயிற்சியுடன், இந்த 3 விஷயங்களையும் பின்பற்றி விரைவாக 9-10 கிலோவை குறைத்த பெண்ணின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு காணலாம்.

Weight Loss Journey: தொடர்ச்சியான உடற்பயிற்சி என்பது தசைகளை வலுப்படுத்துவதற்கு கைக்கொடுக்கும். மேலும் இது இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். உடற்பயிற்சி என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும். நீண்ட வயதானாலும் என்றும் இளமையாக செயல்பட தொடர்ச்சியான உடற்பயிற்சி கைக்கொடுக்கும்.
Weight Loss Journey: 9-10 கிலோவை குறைத்த விமல் ராஜ்புத்
அந்த வகையில், பிட்னஸ் கோச் என இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் விமல் ராஜ்புத் என்ற பெண் அவரது தொடர்ச்சியான உடற்பயிற்சி எப்படி 9-10 கிலோவை குறைக்க உதவியது என்பது குறித்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
உடலுக்கு தேவையற்ற கொழுப்பை கரைப்பதற்கு மட்டுமின்றி உடலின் ஆற்றலை அதிகரித்து ஒட்டுமொத்தமாக உடற்தகுதியுடன் ஆரோக்கியமாக இருக்கவும் உடற்பயிற்சி அவருக்கு உதவியதாக விமல் ராஜ்புத் குறிப்பிடுகிறார். அந்த வகையில் அவரது உடல் எடை குறைப்பில் அவருக்கு கைக்கொடுத்த விஷயங்கள் என்னென்ன என்ற அவரது அனுபவங்களை இங்கு காணலாம்.
Weight Loss Journey: இப்படி வாக்கிங் செய்யுங்க...
அவரது பதிவு ஒன்றில் Cardio Trick குறித்து குறிப்பிட்டிருந்தார். அதாவது, நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, ஓட்டப்பயிற்சியை மேற்கொள்வதை விட இது அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்ததாம். அதாவது, டிரெட்மில்லில் சாதாரணமாக வாக்கிங்கை செய்வதை தவிர்த்து, டிரெட்மில்லை ஏற்றஇறக்கமாகமாக வைத்து நடப்பது (Incline Walking) அதிக கலோரிகளை கரைக்க உதவியதாம்.
அதாவது சமதள பரப்பில் நடைப்பதை காட்டிலும் இது மெதுவாக நடந்தாலும், அதிதீவிரமானதாக இருக்கும் என்கிறார் விமல் ராஜ்புத். மேலும், இது பிட்டம், தொடை பகுதிகள் மற்றும் கால் கெண்டைத்தசைகள் ஆகியவற்றை வலுப்படுத்தியதாகவும் அவர் கூறினார். மெதுவாக நடந்தாலே போதும் என்பதால் கால் முட்டிகளிலும் பெரியளவுக்கு பிரச்னை வராது என்கிறார்.
Weight Loss Journey: Incline Walking நான்கு வகைகள்
டிரெட்மில்லில் இந்த Incline Walking முறையை நான்கு வகைகளில் செய்திருக்கிறார். அதாவது, முதல் 5 நிமிடங்களுக்கு Incline - 7இல், வேகத்தை 3.5இல் வைத்து நடப்பாராம். அடுத்த 5 நிமிடங்களுக்கு Incline - 9இல், வேகத்தை 3.8இல் வைத்து நடப்பாராம். அதற்கு பின் அடுத்த 5 நிமிடம் Incline - 11இல் வேகத்தை 4இல் வைத்து நடப்பாராம். அடுத்து கடைசி 5 நிமிடம் Incline -9இல், வேகத்தை 3.8இல் வைத்து நடப்பாராம்.
Weight Loss Journey: கொழுப்பை குறைக்க உதவிய 3 டிப்ஸ்கள்
இவை மட்டுமின்றி, அவரது கொழுப்பை குறைக்க உதவிய மூன்று டிப்ஸ்களையும் அவர் கூறினார்.
- வயிறு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் தேவையின்றி சாப்பிட மாட்டீர்கள். கடுங்காப்பி குடியுங்கள். இதில் உள்ள காஃப்பின் ஆற்றலை கொடுக்கும், தேவையற்ற பசியை கட்டுப்படுத்தும்.
- நிறைய கலோரிகளை எடுத்துக்கொள்ளாதீர்கள். வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனால் குறைந்த கலோரி உள்ள உணவுகள் அதாவது 200-300 கலோரிகளை எடுத்து்ககொள்ளலாம். மேலும், தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடந்து கலோரிகளை கரைப்பாராம்.
- முட்டையின் வெள்ளைக் கரு, சிக்கன், ப்ரோக்கோலி உள்ளிட்ட புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் காலை எழுந்து 30 நிமிடங்களுக்கு பின் 30 நிமிடங்கள் கார்டியோ உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன்பின் 30 கிராம் புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கலோரி குறைப்பை வேகப்படுத்தும் என்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் விமல் ராஜ்புத் அவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ