6 நாள்களில் 4 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைக்க உதவிய Switch On டயட்!

Weight Loss Journey: ஒரு பெண் 6 நாள்களில் 4 கிலோவை குறைத்துள்ளார். அவர் பின்பற்றிய Switch On டயட் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 30, 2025, 05:21 PM IST
  • 4 வார உணவுமுறை திட்டமாகும்.
  • இதற்காக சில உணவுகளை தவிர்த்துள்ளார்.
  • கொரிய பெண் இந்த டயட்டை பின்பற்றி உள்ளார்.
6 நாள்களில் 4 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைக்க உதவிய Switch On டயட்!

Weight Loss Journey: பலரும் பிட்னஸ் மீது கவனம் செலுத்தும் இந்த காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பலரும் பின்பற்றுகின்றன. அதாவது, பல்வேறு வகையில் உடற்பயிற்சி திட்டங்கள் இருப்பது போன்று, பல்வேறு வகைகளில் உணவுமுறை கட்டுப்பாடுகளும் இருக்கின்றன எனலாம்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 6 நாள்களில் 4 கிலோ குறையும்

கீடோ, பேலியோ, இன்டர்மிடென்ட் பாஸ்டிங் போன்ற பல டயட்கள் இருக்கின்றன. இதனால், உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி உடல் பலமாகி, ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். சமூக வலைதளங்களில் பலரும் பிட்னஸிற்கு பல வகை டயட்களை பரிந்துரைக்கின்றனர்.

அப்படியிருக்க, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் பெண் ஒருவர் Switch On டயட் குறித்து பேசியிருந்தார். தென் கொரியாவின் தலைநகரமான சியோலை சேர்ந்த ஷெர்ரி என்ற பெண் இந்த Switch On டயட்டை பின்பற்றி சுமார் 6 நாள்களில் 4 கிலோவை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Weight Loss Journey: Switch On டயட்

ஷெர்ரி அந்த வீடியோவில்,"6 நாள்களில் நான் 4 கிலோ எடையை குறைத்தேன், அதற்கு நான் இதைதான் செய்தால். முதலில் Switch On என்றால் என்ன என்பதை பார்க்கலாம். இது எனக்கு உடல் எடையை குறைக்க உதவியது. அதாவது, 4 வார உணவுமுறை திட்டமான இதை, கொரியன் மருத்துவர் ஒருவர் எனக்கு பரிந்துரைத்தார். இது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும். மேலும், தசை இழப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டு, இன்சுலின் ரெஸிஸ்டென்ஸையும் சீராக்கும்" என்றார்.

Weight Loss Journey: 4 வார திட்டம்

தசை இழப்பு ஏற்படாமல் தேவையற்ற உடல் எடையை குறைத்து, ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். புரதம் அதிகமான உணவுகளை அவர் அதிகமாக சாப்பிட்டுள்ளார். காஃப்பின், மது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சர்க்கரை ஆகியவற்றை அவர் தவிர்த்துள்ளார். நேர வரம்புகளின் அடிப்படையில் சாப்பிடும் வழக்கத்தை அவர் அன்றாடம் பின்பற்றி உள்ளார்.

Weight Loss Journey: இந்த டயட்டில் என்ன செய்யணும்? 

இந்த 4 வார திட்டத்தில்,"முதல் வாரம் புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள் மற்றும் அதிக புரதச்சத்துள்ள உணவுகளுடன் நச்சு நீக்கம், குடல் மீட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன். இரண்டாவது வாரம், புரதச்சத்து நிறைந்த உணவுகள், இன்டர்மிடென்ட் டயட் மூலம் தசை மீட்பில் கவனம் செலுத்தினேன். மூன்றாவது வாரத்தில், நீட்டிக்கப்பட்ட இன்டர்மிடென்ட் டயட் மற்றும் அதிகரித்த புரத உட்கொள்ளல் மூலம் கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்தும்" என்றார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

)

இந்த உணவுமுறை தசை இழப்பில் சமரசம் செய்யாமல், உடலை ஆற்றலுக்காக சேமித்து வைத்திருக்கும் கொழுப்பைப் பயன்படுத்தத் தூண்டுகிறது. அதுமட்டுமின்றி, இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. குறிப்பிட்ட டயட், உடற்பயிற்சி, உண்ணாவிரத சுழற்சிகள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தலாம்.

Weight Loss Journey: தவிர்க்கவும், சேர்க்கவும் வேண்டிய உணவுகள்

காஃபின், கார்போஹைட்ரேட்டுகள், பால் சார்ந்த பொருட்கள், மது, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் ஆகியவற்றை அவர் சாப்பிடாமல் தவிர்த்துள்ளார். மெலிந்த வேகவைத்த இறைச்சிகள், மீன், தோல் நீக்கிய கோழி, விதைகள், கொட்டைகள், பால், பீன்ஸ், சீஸ், முட்டை, பழங்கள் ஆகிய உணவுகள் அவரது உணவுமுறையில் அதிகம் இருந்துள்ளது. 

Weight Loss Journey: Switch On டயட் என்றால் என்ன?

ஊடக மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் யோங்-வூ பார்க் என்பவரால் இந்த Switch On உணவுமுறை உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. வளர்சிதை மாற்ற சமநிலையை மீட்டெடுப்பதிலும் இன்சுலின் எதிர்ப்பை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தி உள்ளார்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய... 1 மாதத்திற்கு காபிக்கு பதில் ‘இதை’ குடிங்க! எடை மடமடன்னு குறையும்..
zeenews.india.com/tamil/lifestyle/drink-green-tea-instead-of-coffee-for-a-month-that-will-help-you-in-weight-loss-journey-571589

மேலும் படிக்க | 19 கிலோவை டக்குனு குறைத்த நபர்... 2025 நியூ இயர் சபதத்தில் வெற்றி - எப்படி செய்தார்?

மேலும் படிக்க | வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டே 37 கிலோவை குறைத்த பெண் - எப்படி?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News