ஆபத்தில் முடிந்த உடல் எடை குறைப்பு... 104 கிலோவில் இருந்து 30 கிலோ... மீண்டது எப்படி?

Weight Loss Journey: 104 கிலோவில் இருந்து 30 கிலோவுக்கு உடல் எடையை குறைத்த நபர் மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்பிய அவரின் உடற்தகுதி பயணத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2025, 09:49 PM IST
  • ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மிக முக்கியமானது.
  • அதீத உணவுமுறை கட்டுப்பாடுகள் பிரச்னையை தரலாம்.
  • உடல் எடை குறைப்புக்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
ஆபத்தில் முடிந்த உடல் எடை குறைப்பு... 104 கிலோவில் இருந்து 30 கிலோ... மீண்டது எப்படி?

Weight Loss Journey: உடற்தகுதியுடன் இருப்பது என்பது ஒரு தவம் போன்றது. அதாவது விடாமுயற்சியுடன், ஒழுக்கமாக இருந்தால், நினைத்த உடற்தகுதியை பெறுவீர்கள். இதுவும் நீண்ட பயணமாகும். உடல் எடை குறைப்பு மட்டும் உடற்தகுதி இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அதில் அடக்கம் ஆகும்.

Weight Loss Journey: ரோஹித் போடா என்பவரின் கதை

அந்த வகையில், ஒவ்வொருவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ளலாம். அப்படியிருக்க, ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரோஹித் போடா என்பவர் அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம். அவரின் உடல் எடை குறைப்பு பயணத்தில் வித்தியாசமாக ஏதும் செய்யவில்லை, வழக்கமான வழியிலேயே அவர் உடல் எடையை குறைத்திருக்கிறார்.

Weight Loss Journey: உடற்தகுதி பயணம்

ரோஹித் போடா ஒரு கட்டத்தில் 104 கிலோவில் இருந்துள்ளார். அவரது ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே அவரை 74 கிலோவுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு நடுவே அவருக்கு நேர்ந்த ஆபத்து, அதில் இருந்து அவர் மீண்டு வந்தது ஆகியவையும் அவரின் உடற்தகுதி பயணத்தில் முக்கியமாகும். ரோஹித் உடற்தகுதியுடன் இருப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி உள்ளார். அவர் 15 ஆண்டு காலமாக உடற்தகுதியுடன் இருந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Weight Loss Journey: ஆபத்தான உடல் எடை குறைப்பு

ஆரம்ப காலகட்டத்தில் அவரும் மற்றவர்களை போல் வேலை மற்றும் தனிப்பட்ட உடல்நலனில் சமநிலையை கடைப்பிடிக்க கடுமையாக திணறி உள்ளார். ஆனால், அந்த மாற்றத்தை கொண்டுவர அவர் கடுமையாக உழைத்துள்ளார். அதன் பலனாக உடல் எடையை குறைத்திருக்கிறார்.

ஆனால், இது அவருக்கே அபாயகரமாக முடிந்துள்ளது. அதாவது, 104 கிலோவில் இருந்த அவர் 30 கிலோவுக்கு வந்துள்ளார். இந்த திடீர் எடை குறைவு அவருக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவர் உடல் எடையை சமநிலையில் வைத்துக்கொள்ள நீண்ட நெடிய அணுகுமுறையை கடைபிடித்துள்ளார்.

Weight Loss Journey: ரோஹித் மீண்டு வந்தது எப்படி?

முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, முறையான ஊட்டச்சத்தை சாப்பிட்டு நீண்ட கால நோக்கில் உடல் எடையை ஆரோக்கியமான அளவிற்கு உயர்த்தி உள்ளஆர். அதீதமான உணவுக் கட்டுப்பாடுகள், உடனடி தீர்வுகள் ஆகியவற்றை கைவிட்டு தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார். 

இதனால், அவர் தற்போது 74 கிலோவில் தொடர்கிறார். உடல்தகுதி என்பது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லை, உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை முறையிலும் ஒரு சமநிலையை கடைபிடிப்பது ஆகும் என்பது ரோஹித்தின் உடற்தகுதி பயணத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாகும்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Boda (@rohitboda)

Weight Loss Journey: ரோஹித் போடாவின் தாரக மந்திரம்

உடற்தகுதி குறித்து ரோஹித் போடா இன்ஸ்டாகிராமில் போட்டியிருந்த பதிவு ஒன்றில்,"ஒரே நாளில் எதுவும் நடந்துவிடாது. அதற்கான காலம் இருக்கும். அதற்கு நிறைய நேரம் எடுக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாகவும், சீராகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். சீராக இருக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர்ந்து முயற்சி செய்து மாற்றியமைக்கவும் அனைவரும் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இதுவே அவரின் தாரக மந்திரமாக இருந்துள்ளது.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரோஹித் போடா என்பவரின் தனிப்பட்ட அனுபவ பகிர்வாகும். இதனை பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | '3 மாதங்களில் 9 கிலோ' உடல் எடையை குறைக்க உதவியது என்ன? நடிகை ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!

மேலும் படிக்க | 1 வாரத்தில் 8 கிலோ குறைத்த பிரபல நடிகை! 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ‘இதை’ குடித்தாராம்..

மேலும் படிக்க | உங்களை நோயாளியாக்கும் சில உணவுகள்... ஆரோக்கியமாக இருக்க கண்டிப்பாக நோ சொல்லுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News