19 கிலோவை டக்குனு குறைத்த நபர்... 2025 நியூ இயர் சபதத்தில் வெற்றி - எப்படி செய்தார்?

Weight Loss Journey: 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் தற்போது வரை மூன்று மாதங்களில் 19 கிலோவை ஒரு நபர் குறைத்துள்ளார். அவரின் அனுபவத்தையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 27, 2025, 04:11 PM IST
  • அவர் 2025 தொடக்கத்தில் 98 கிலோவில் இருந்துள்ளார்.
  • தற்போது அவர் 78 கிலோவில் உள்ளார்.
  • கட்டுப்பாடான டயட்டோ, அதிதீவிர உடற்பயிற்சிகளையே அவர் செய்யவில்லையாம்.
19 கிலோவை டக்குனு குறைத்த நபர்... 2025 நியூ இயர் சபதத்தில் வெற்றி - எப்படி செய்தார்?

Weight Loss Journey: 2025ஆம் ஆண்டு பிறந்து இன்னும் நான்கு நாள்களில், மூன்று மாதங்கள் நிறைவடையப் போகிறது. அதாவது, 90 நாள்கள் நிறைவடைய இருக்கின்றன. அந்த வகையில், புத்தாண்டில் நீங்கள் பல மாற்றங்களை செய்யப்போவதாக சபதம் எடுத்திருப்பீர்கள்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 2025இல் எடுத்த சபதம்

ஆனால், இந்த 3 மாதங்களில் நீங்கள் எடுத்த சபதங்களை சரியாக பின்பற்றி வருகிறீர்களா.... என கேட்டால் 99% நபர்கள் இல்லையென்றே கூறுவார்கள். அப்படியிருக்க, மீதம் இருக்கும் அந்த 1% நபர்களுள் சம்வித் மிஸ்ரா (Samvit Mishra) என்பவரும் ஒருவர் எனலாம். 

ஆம், 2025ஆம் ஆண்டில் உடல் எடையை குறைத்து, உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என அவர் சபதம் எடுத்திருக்கிறார். ஆனால், சட்டென உடல் எடையை குறைப்பதற்கான உணவுமுறை கட்டுப்பாடோ, தீவிரமான உடற்பயிற்சிகளோ எதையும் அவர் செய்யவில்லையாம். மேலும், முழு நேர பணியாளராக பணியாற்றியதால் அவரால் ஜிம்முக்கு செல்லவும் வாய்ப்பில்லாமல் போனதாம்.

Weight Loss Journey: 3 மாதங்களில் 19 கிலோவை குறைத்த நபர்  

அப்படியிருந்தும், இந்த 3 மாதங்களில் மட்டும் அவர் 19 கிலோ உடல் எடையை குறைத்து உடற்தகுதியை பெற்றிருக்கிறார். அதாவது குறுக்கு வழிகளையோ, குறுகிய கால நலன்களையோ விரும்பாமல் நீண்ட கால நோக்கில் ஆரோக்கியமாக உடல் எடையை குறைத்திருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி உடல் எடையை குறைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Weight Loss Journey: 98 கிலோ டூ 79 கிலோ

இதுகுறித்து 37 வயதான சம்வித் மிஸ்ரா ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில்,"2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான் 98 கிலோ உடல் எடையில் இருந்தேன். இதனால், மிகவும் மந்தமாக உணர்ந்தேன், ஆரோக்கியமற்று இருந்தேன். உடனே என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

எனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனக்கு தெரிந்தது. உடனடி உணவுக் கட்டுப்பாடுகள், அதி தீவிர உடற்பயிற்சிகள் ஆகியவற்றை தவிர்த்து, நீண்ட கால வாழ்க்கைமுறை மாற்றத்தில் கவனம் செலுத்த விரும்பினேன். எனது இலக்கு மிகவும் எளிமையாக இறுந்தது. எனது ஒட்டுமொத்த உடல்நலனையும் கருத்தில்கொண்டு ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தேன். தற்போது மார்ச் 24ஆம் தேதியின்படி நான் 79 கிலோவில் உள்ளேன். அதாவது மூன்று மாதங்களுக்குள் 19 கிலோவை குறைத்திருக்கிறேன்" என்றார்.

Weight Loss Journey: உணவுப் பழக்கம் என்ன?

உடல் எடையை குறைக்க அவர் பின்பற்றிய உணவுப் பழக்கவழக்கம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். சிக்கலான டயட்டை பின்பற்றுவதற்கு பதில் எளிமையான, முழுமையான, இயற்கை உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டேன் என்றார்.

காலை உணவாக பழங்கள், அவல், கடலை மாவு தோசை ஆகியவற்றை சாப்பிட்டுவாராம். மதிய உணவிற்கு அவித்த ப்ரோக்கோலி, பாகற்காய், கடலை மாவு தோசையை சாப்பிடுவாராம். இரவு உணவை விரைவாகவே அவர் சாப்பிட்டுக்கொள்வாராமம். தாமரை விதைகள், வேர்க்கடலையை அவர் இரவு உணவாக எடுத்துக்கொண்டுள்ளார்.

Weight Loss Journey: தவிர்த்த உணவுகள் 

அதுமட்டுமின்றி, வெளியில் தயாரிக்கப்படும் உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், பால் ஆகியவற்றை தவிர்த்தாராம். மேலும், துரித உணவுகளை தொடவே மாட்டாராம். இதனை ஒரு நாள் கூட மீறாமல் தொடர்ச்சியாக கடைபிடித்து வந்துள்ளார். வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டதன் மூலம் ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த முடிந்ததாகவும், அதீத கலோரிகளை தவிர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Weight Loss Journey: உடற்பயிற்சிகளும்... ஆரோக்கிய நொறுக்குத் தீனிகளும்!

இவர் அதிதீவிர உடற்பயிற்சிகள் எதையும் செய்யவில்லையாம். தினமும் 100 படிகளில் ஏறினாராம். வாரத்திற்கு மூன்று முறை அரைமணிநேரம் சைக்கிள் அழுத்துவாராம்.

மேலும், இனிப்பு பலகாரங்களையும், நொறுக்குத் தீனிகளையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை வரும்போதெல்லாம் துரித உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான வறுத்த தாமரை விதைகள், பழங்களை அவர் சாப்பிடுவாராம். குறைந்த அளவில் உணவை எடுத்துக்கொள்வதிலும் கவனமுடன் இருந்ததாக கூறுகிறார். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சம்வித் மிஸ்ராவின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டே 37 கிலோவை குறைத்த பெண் - எப்படி?

மேலும் படிக்க | 92 கிலோவில் இருந்த பெண்... 27 கிலோவை குறைக்க உதவிய உணவுகள் என்ன?

மேலும் படிக்க | '3 மாதங்களில் 9 கிலோ' உடல் எடையை குறைக்க உதவியது என்ன? நடிகை ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News