2025ஆம் ஆண்டில் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து 3 மாதங்களில் சுமார் 19 கிலோ எடையை குறைத்து உள்ளார். அதிலும் குறிப்பாக ஜிம்மிற்கு செல்லாமல் உடல் எடையை குறைத்துள்ளார். அது எப்படி சாத்தியமானது என்பதை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பகிர்ந்து கொண்ட அவர், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் 98 கிலோவாக இருந்தேன். சோம்பலாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருந்த நான் இதில் இருந்து மாற்றம் தேவைப்படுவதாக உணர்ந்தேன். ஆனால் விரைவான உணவுமுறைகளோ அல்லது தீவிர உடற்பயிற்சியையோ தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். அதன்படி 3 மாதங்களில் நான் வெற்றிகரமாக 19 கிலோ எடையை குறைத்தேன். தற்போது எனது எடை 79 கிலோ ஆகும் என கூறினார்.
அவர் பின்பற்றிய உணவுமுறைகள்
காலை உணவிற்கு அவர் பழங்கள், சீலா( கடலை மாவு பான்கேக்), போஹா ஆகியவற்றை எடுத்துக்கொண்டார்.
மதிய உணவிற்கு வேகவைத்த சிக்கன், பாகற்காய், கடலை பருப்பு சீலா எடுத்துக்கொண்டார்.
இரவு உணவிற்கு மக்கானா மற்றும் நிலக்கடலையை எடுத்துக்கொண்டார்.
தவிர்த்தவை: வெளி உணவு, பாக்கெட் உணவுகள், குளிர் பானங்கள் மற்றும் பால்.
உடற்பயிற்சி என்ன?
அவர் ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடவில்லை என்றாலும், அவர் தினமும் சுறுசுறுப்பாக இருப்பதை உறுது செய்தார்.
அவர் தினமும் 100 படிகள் ஏறுவது மற்றும் வாரத்திற்கு மூன்று முறை 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்துள்ளார். அவர் செய்யும் சிறிய சிறிய முயற்சிகள் பெரிய பலன்களை தரும் என்பதை உறுதியாக நம்பினார்.
ஆசைகளை கட்டுப்படுத்தியது எப்படி?
தொடக்கத்தில், அவருக்கு துரித உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகள் மீது அதீத ஆசை இருந்துள்ளது. இதனை தவிர்க்க, வறுத்த மக்கானா, பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்தார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியே சென்று சாப்பிடுவது போன்ற சூழலும் ஏற்பட்டது. ஆனால் நான் ஆரோக்கியமான இருக்க இது போன்ற பகுதி அளவுகளையும் தவிர்த்தேன். காலப்போக்கில் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு வேண்டாம் என மறுப்பது மிகவும் எளிமாகிவிட்டது.
உடல் எடையை குறைப்பது என்பது ஜிம்மிற்கு செல்வது போன்ற விஷயங்கள் அல்ல. மாறாக நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வது பற்றியதாகும். இதையே இந்த எடை இழப்பு பயணத்தில் இருந்து கற்றுக்கொண்டேன். உடல் எடையை குறைப்பதற்கு ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நிலையான பழக்கவழக்கங்களும் உறுதியான ஒழுக்கமுமே போதுமானது ஆகும் என அவர் தெரிவித்தார்.
மேலும் படிங்க: ரன்னிங் vs வாக்கிங்: உடல் எடையை குறைக்க எது சிறந்தது?
மேலும் படிங்க: கோடைகாலத்தில் இந்த மூன்று உணவுகள் விஷமாக மாறும்..!! உஷார் மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









