90 நாட்களில் 10 கிலோ எடை குறைத்த தமன்னா.. எப்படி தெரியுமா? சூப்பர் டிப்ஸ்

Tamannaah Weight Loss Tips:  நடிகை தமன்னா 90 நாட்களில் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து  அவரது கோச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவரது டயட் குறித்தும் விளக்கியுள்ளார்.

Written by - Umabarkavi K | Last Updated : Apr 1, 2026, 01:02 PM IST
  • தமன்னா பிட்னஸ் சீக்ரெட்
  • 90 நாட்களில் 10 கிலோ எடை குறைத்தார்
  • புரோட்டீன் முக்கியாக சேர்க்க வேண்டும்
90 நாட்களில் 10 கிலோ எடை குறைத்த தமன்னா.. எப்படி தெரியுமா? சூப்பர் டிப்ஸ்

Tamannaah Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, டயட், உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை பலரும் தீவரமாக செய்து வருகின்றனர்.  ஆனால், இதற்கு பல வருடங்கள் எடுக்கும். குறைந்தது 2 வருடங்கள் நீங்கள் தீவிர உடற்பயிற்சி, டயட் என இருந்தால் மட்டுமே உங்களால் உடல் எடையை குறைக்க முடியும். அப்படி தான், நடிகை  தமன்னா 90 நாட்களில் 10 கிலோ வரை ஆரோக்கியமாக உடல் எடையை குறைத்துள்ளார். இவரின் பிட்னஸ் சீக்ரெட் என்ன என்பது குறித்து பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

நடிகை தமன்னாவின் பிட்னஸ் சீக்ரெட்

நடிகை தமன்னா தற்போது திரைத்துறையில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக  உள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ப்ரோமோவில் நடிகை தமன்னா சந்றே எடை மெலிந்து காணப்பட்டார். சமீபத்தில் அவரது புகைப்படங்கள் எடை இழப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், அவர் 90 நாட்களில் 10 கிலோ எடை வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமன்னாவின் ஃபிட்னஸ் கோச்சர் சித்தார்த்  90 நாட்களில் 10 கிலோ எடை குறைத்தது குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,  நாம் தினமும் சாப்பிட மூன்று வேளை உணவிலும் புரோட்டின் அத்தியாவசியமாக இருக்க வேண்டும். புரோட்டின் என்பது வெறும் தசை வலுவாக இருப்பதற்கு மட்டுமில்லாமல் இது உங்களது cravings-ஐ குறைக்க உதவும். இது உங்களது ஆரோக்கியமான டயட்டுக்கு கொண்டு செல்ல உதவும். இதனால் உங்கள் உணவில் புரோட்டின் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னென்ன சாப்பிட வேண்டும்?

புரோட்டின் நிறைந்த உணவுககளை சாப்பிடும்போது செரிமானமாக சிறிது நேரம் எடுக்கும். இதனால் உங்களின் பசியும் கட்டுக்குள் இருக்கும். முட்டை, tofu, சிக்கன், மீன், பன்னீர், பீன்ஸ் ஆகியவற்றில் அதிகமான புரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்களது நாளை அதிக புரதம் உள்ள முட்டையில் தொடங்குவது உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

அதோடு காலையில், greek yogurt உடன் நட்ஸ் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. இது உங்களது பிசிகல் ஆக்டிவிட்டியை வலிமைப்படுத்தும். உங்களுக்கு எப்போதெல்லாம் பசி எடுக்குமோ அப்போது நீங்கள் தண்ணீர் குடிப்பது மிகவும் சிறந்தது. ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிப்பது மூலம்  நீங்கள் ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

உடல் நீரேற்றமாக இருக்கும் போது உங்களது செரிமானம் சீராகவும் இருக்கும். இதன் மூலம் உங்களது எடையும் குறையும். நீங்கள் மூன்று வேளை உணவு சாப்பிடும் போதும் அதற்கு முன்பாக வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்ச்‌ போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடும் போது உங்கள் செரிமானத்தை எளிதாக்கும். மேலும், உங்களை நீரேற்றமாக வைக்கவும் உதவும். இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உங்களது பசியை கட்டுக்குள் வைக்கும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதை தவிர்த்து தினமும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி மற்றும் சரிவிகித டயட் சில மாதங்களிலேயே 5 முதல் 10 கிலோ வரை எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.உடல் எடையை குறைக்க என்னென்னலாம் செய்ய வேண்டும்?

உடல் எடையை குறைக்க  என்னென்ன சாப்பிட வேண்டும்?

எண்ணெய் சார்ந்த உணவுகள், Junk foods போன்றவறை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக,  ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அதாவது, புரோட்டின், நார்ச்சத்து இருக்கும் உணவுகளை மூன்று வேளையும் சேர்க்க வேண்டும். குறிப்பாக, புரதச்சத்து நிறைந்த முட்டை, மீன், பன்னீர், பருப்பு வகைகள், தயிர் போன்றவற்றை சாப்பிடலாம். இது உங்கள் பசியை கட்டுக்குள் வைக்க வேண்டும். 

மேலும், நார்ச்சத்து நிறைந்த காலிஃபிளவர், ப்ரோக்கோலி, கீரை, பழங்கள், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்க்கலாம்.  பானங்களை பொறுத்தவரை, கிரீன் டீ, லெமன் டீ, அதிகளவு தண்ணீர் போன்றவற்றை குடிக்கலாம்.  அதோடு இல்லாமல், உணவை சரிவிகித அளவில் எடுத்துக் கொள்வது சிறந்தது. மேலும், டயட் தாண்டி, உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். தினமும் 1 மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் எடையை குறைக்க  உதவும். இதோடு, உடல் எடையை குறைக்க வலிமை பயிற்சியும் மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க: ஒரு வேளை உணவு.. சட்டென 22 கிலோ எடை குறைத்த பிரபல நடிகர்.. டயட் சீக்ரெட் இதோ!

மேலும் படிக்க: வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? பேராபத்து காத்திருக்கு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News