ஒரு வேளை உணவு.. சட்டென 22 கிலோ எடை குறைத்த பிரபல நடிகர்.. டயட் சீக்ரெட் இதோ!

Weight Loss Tips Of Actor Sharwanand: எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் 22 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். எனவே, இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து பார்ப்போம்.  

Written by - Umabarkavi K | Last Updated : Mar 31, 2026, 05:55 PM IST
ஒரு வேளை உணவு.. சட்டென 22 கிலோ எடை குறைத்த பிரபல நடிகர்.. டயட் சீக்ரெட் இதோ!

Weight Loss Tips Of Actor Sharwanand: உடல் பருமனால் பலரும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, நீரிழிவு நோய் போன்றவற்றை இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், இளைஞர்கள், பெரியவர்கள் தீவிர உடற்பயிற்சி, நடையிற்சி, டயர் போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர்.  ஆனால், உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. இதற்கு விடாமுயற்சி என்பது முக்கியம்.

Add Zee News as a Preferred Source

தொடர்ந்து, டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தால் தான், உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் தீவிர உடற்பயிற்சி டயர் மூலம் 22 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.  அவர் வேறு யாருமில்லை எங்கேயும், எப்போது நடிகர் சர்வானந்த். இவர் தான் 22 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து பார்ப்போம்.

 நடிகர் சர்வானந்தின் டயட் சீக்ரெட்

தெலுங்கு திரையுலனின் பிரபல நடிகராக வலம் வருபவர் சர்வானந்த். தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில்   நடித்து கோலிவுட்டிலி மிகவும் பிரபலமானார். ஆனால், அவரது அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் ஹிட் கொடுக்கவில்லை. இதனால், அவர் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக கணம் என்ற படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார். தற்போது, அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் பைக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கான சர்வானந்த் சுமார் 22 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.  

சுமார் 92 கிலோ வரை இருந்த அவர், அதிலிருந்து 22 கிலோ வரை குறைந்துள்ளார். தனது உடல் எடை குறைப்பு பற்றி அவர் பேசுகையில், "தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்திருப்பேன். அப்போது முதல் எனது உடற்பயிற்சியை தொடர்வேன். காலை 4.30 மணிக்கு எழுந்து, 12 கி.மீ வரை நடைபயிற்சி தினமும் மேற்கொள்வேன். மேலும், ஒரு பார்க்கில் தினமும் ஜாக்கிங் செல்வேன். படப்பிடிப்பு இல்லாத  நாளில் மதியம் ஜிம் செல்வேன். மாலையில் நீண்ட தூரம் வாக்கிங் செல்வேன்.  கிட்டதட்ட 8 மாதங்கள் இதனை பின்பற்றுனேன். பிட்னஸ் என்பது உடனடி மாற்றம் இல்லை. நீடித்த பயணம் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

டயட் பற்றி பேசுகையில், "தினமும் ஒரு நேரம் மட்டுமே முழுமையாக சாப்பிட்டு வந்துள்ளேன். மதியம் ஒரு ப்ரோட்டீன் ஷேக், இரவில் லேசான உணவு சாப்பிட்டேன். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தலோ 70 சதவீதம் உடல் எடையை குறைத்துவிடலாம். 30 சதவீதம் மட்டுமே உடற்பயிற்சி  தேவைப்படுகிறது. டயட்டில் இருந்தாலும், எனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவேன். சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சியை அதிகப்படுத்திக் கொள்வேன். 22 கிலோ உடல் எடையை குறைப்பதற்கு 2 வருடங்கள் ஆனது.  இப்போது 70 கிலோ உள்ளேன்” என்றார்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க: ஒல்லியாக இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமானவர்களா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

 

மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க இனிப்புகள் மட்டுமே காரணமா? மறைமுக காரணங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News