Myna Nandhini Weight Loss Tips: இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் எடையை குறைக்க தீவரமாக செயல்பட்டு வருகின்றனர். தினமும் டயட், ஜிம், உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை செய்து வருகின்றனர். ஆனால், உடல் எடையை குறைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. உடல் எடையை குறைக்க பல மாதங்கள் எடுக்கலாம். இதற்கு பொறுமையும், உணவு கட்டுப்பாடும் இருந்தால் உடல் எடையை குறைத்துவிடலாம். அப்படி தான், நடிகை மைனா நத்தினி 5 மாதத்தில் 13 கிலோ எடை வரை குறைத்துள்ளார்.
5 மாதத்தில் 13 கிலோ எடை குறைத்த மைனா நந்தினி
மைனா நத்தினி மற்றும் அவரது கணவன் யோகேஷ் 5 மாதங்களில் பெரிய அளவில் உடல் எடையை குறைத்துள்ளானர். யோஷேஷ் 90 கிலோவில் இருந்து 70 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்,. நந்தினி 75 கிலோவில் இருந்து 62 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இதில், மைனா நத்தின் தான் எப்படி 5 மாதங்களில் 13 கிலோ வரை உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். தான் காலை முதல் இரவு சாப்பிடும் உணவு வரை அவர் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
முதலில் காலை எழுந்ததும் ஒரு டம்பளர் தண்ணீரை மைனா குடித்து வருகிறாராம். அதன்பிறகு யோகா, ஜிம், உடற்பயிற்சி, நடைபயிற்சி என செய்து வருகிறார். இப்படி காலையில் தண்ணீர் குடித்துவிட்டு, வெறும் வயிற்றில் ஜிம், யோகா, உடற்பயிற்சி செய்வது புத்துணர்ச்சியை கொடுக்கும். காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஆப்பிள் சைடர் வினிகர் சாப்பிட்டு வருவதாக மைனா நந்தினி கூறியுள்ளார்.
தினமும் மைனா நந்தினி சாப்பிட்ட உணவு என்ன?
ஆப்பிள் சைடர் வினிகர் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். மேலும், உடலில் கொழுப்பை சேர்வதை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகிற்து. இருப்பினும், நீங்கள் இதனை எடுக்கும் போது நிபுணரிடம் கேட்டு உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருப்பவர்கள் நிபுணரின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.
காலை உணவாக முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழதை நன்கு மசித்து அதில் ப்ரோட்டீன் பவுடரை போட வேண்டும். ப்ரோட்டீன் பவுடர் நிபுணர்கள் பரிந்துரைத்ததாக இருக்க வேண்டும். முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும் அதில் கலந்து, தோபை போல ஊற்றி சாப்பிட்டு வருவதாக மைனா நந்தினி தெரிவித்துள்ளார். இதனை காலை உணவாக அவர் சாப்பிட்டு வருகிறது. ஏற்கனவே, முட்டையில் அதிகப்படியான ப்ரோட்டீன் உள்ளது. கூடவே அவர் ப்ரோட்டீன் பவுடரையும் சாப்பிட்டு வருகிறார். இது மேலும் உங்கள் எலும்புகளை வலுவாக வைக்க உதவும்.
மதிய உணவிற்கு எண்ணெய் சேர்க்காமல் ஏர் ஃப்ரையர் மூலம் மீன் வறுவலை சாப்பிடுகிறார். இதில் தேவைப்பட்டால் சிறிது ஆலிவ் ஆயிலை சேர்த்து ஏர் ஃப்ரையரில் வைத்து பொறித்து சாப்பிடுகிறாராம். இதனுடன் 200 கிராம் சாதம், 100 கிராம் காய்கறிகள் அல்லது பழங்கள், 1 முட்டையின் மஞ்சள் கரு, 3 முட்டையன் வெள்ளைக்கருவை மதிய உணவாக இதனை மட்டும் சாப்பிட்டு வருகிறாம்.
இரவு உணவை பொறுத்தவரை, மைனா நந்தினி 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுகிறாராம். இரவு உணவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருகிறார். சர்க்கரை வள்ளிக் கிழங்குடன், 200 கிராம் மீன், 2 முட்டை வெள்ளைக்கரு என சாப்பிட்டு வருகிறார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு வலிமையை கொடுப்பதோடு, உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை வள்ளிக் கிழங்கை இரவில் சாப்பிடும்போது, நள்ளிரவில் பசி வராமல் தடுக்கிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு மெதுவாக செரிமானம் ஆகக் கூடிய உணவு. எனவே, தூங்க செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரம் முன்பு சர்க்கரை வள்ளிக் கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க: இரவில் தூக்கம் வரவில்லையா? அலட்சியம் படுத்த வேண்டாம், உயிருக்கே ஆபத்தாகலாம்!
மேலும் படிக்க: நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யுங்க!
மேலும் படிக்க: ஆம்ப்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி செய்வது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ








