)
Vidya Balan Diet Tips: இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க (Weight Loss) பலரும் பல்வேறு முயற்சி செய்து வருகின்றனர். வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை காரணமாக உடல் எடை அதிகமாக அதிகரிக்கிறது. இதனால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான டயட் முறை கடைபிடிப்பது அவசியம். அதோடு இல்லாமல் லேசான உடற்பயிற்சிகள் செய்வது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் உடல்பயிற்சி செய்யாமலே உடல் எடையை குறைத்துள்ளார். எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நடிகை வித்யா பாலன் தனது உடல் எடை குறைப்பு பற்றி பேசியிருக்கிறார். அதன்படி, நடிகை வித்யா பாலன் உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை. ஆரோக்கியமாக தனது உடல் எடையை அவர் குறைத்துள்ளார். குறிப்பாக, வித்யா பாலன் எலிமினேஷன் டயட் முறையை பின்பற்றி வந்துள்ளார். குறிப்பாக, தனது உடல் எடை அதிகரிப்புக்கு கொழுப்பு காரணமில்லை என்ற கண்டறிந்த அவர், அழற்சியே காரணம் என தெரிவித்தார். இதனால், எலிமினேஷன் டயட்டில் அவர் இருந்தார்.
எலிமினேஷன் டயட் என்பது உடலில் அழற்சியை தூண்டும் உணவுகளை கண்டறிந்து தவிர்த்து வந்துள்ளதார் வித்யா பாலன். இதற்கு ஏற்றவாறு டயட் இருந்ததாக வித்யா பாலன் குறிப்பிட்டார். பச்சை காய்கறிகள், பழங்களை விட பெரும்பாலும் சமைத்த உணவுகளை வித்யா பாலன் சாப்பிட்டு வந்துள்ளார். மேலும், சர்க்கரை, உப்பு, மைதா போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அவர் தவிர்த்தார். இதன் மூலம் வித்யா பாலன் 3 மாதத்தில் 9 கிலோ குறைத்ததாக பகிர்ந்துள்ளார்.
அழற்சி எதிர்ப்பு உணவு முறை என்பது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான உணவு முறையாகும். நீண்ட கால அழற்சி பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளிட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
அழற்சி எதிர்ப்பு உணவுகளை பொறுத்தவரை அவகேடோ, ப்ளூபெர்ரி, திராட்சை, கிரான்பெர்ரி, ஆப்பிள், சிட்ரஸ் பழங்கள் ஆகும். பீட்டா கரோட்டின் கொண்ட கேரட், வைட்டமின்கள் ஏ, சி கொண்ட குடைமிளகாய், வைட்டமின் சி கொண்ட வெங்காயம் ஆகியவை அழற்சியை குறைக்க உதவும். ஓட்ஸ், வாழைக்காய், தயிர் ஆகியவை வழக்கமான உணவில் சேர்க்கப்பட வேண்டிய சிறந்த புரோபயாட்டிக் ஆகும். அதோடு, ஆலிவ் எண்ணெய், சூரை முன், சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவையில் ஒமேகா 3 உள்ளது. பூஞ்சி, இஞ்சி, மஞ்சள் ஆகியவை அழற்சி எதிர்ப்பு டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிற்றுண்டியாக ஆப்பிள், பாதம் பால், வால்நட்ஸ், மஞ்சள் பால் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவாக பழுப் அரிசி, பனீர், சிக்கன் சேர்த்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் பாதாம் பருப்புகள் அல்லது பழத்தை சாப்பிடலாம். இரவில் காய்கறி சூப்கள், பருப்பு, ரொட்டி ஆகியவை எடுத்துக் கொள்ளலாம். இரவில் மஞ்சள் பால் குடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உணவு முறையுடன் சேர்த்து போதிய தூக்கம், தினசரி உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவது முக்கியம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)