Kushboo Weight Loss Tips: இன்றைய காலத்தில் உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் பருமனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றனர். இதனால், உடல் எடையை குறைக்க பலரும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உடற்பயிற்சி, ஜிம் போன்றவற்றை செய்து வருகின்றனர். ஆனால், உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியம். இப்படி இருக்கையில், நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு சுந்தர் 4 வருடங்களில் 38 கிலோ எடையை குறைத்துள்ளார். எப்படி 38 கிலோ வரை குறைத்தார் என்பது குறித்து அவரே பகிர்ந்துள்ளார்.
குஷ்பு உடல் எடையை குறைத்தது எப்படி?
இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளில் நான் 38 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். உடல் எடையை குறைப்பது என்பது ஈஸியாக விஷயம். ஆனால், அந்த உடல் எடையை நாம் எப்படி தக்க வைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமான விஷயம். இதற்கு Strengthning உடற்பயிற்சி செய்வது முக்கியம். உடல் எடையை குறைப்பதை விட, வலிமையாக இருப்பது முக்கியம். நான் ஜிம்மிற்கு செல்ல மாட்டேன். நான் வீட்டு வேலைகள் இருந்தால் செய்வேன்.
ஆனால், எனது உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு நான் சென்றதில்லை. நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை வீட்டிலேயே செய்தேன். நமக்கு எது சரியாக வரும் என அதை புரிந்து கொள்ள வேண்டும். இதைவிட முக்கியம் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது. மட்டன் பிரியாணி எனக்கு ரொம்ப முக்கியம். இதனை சாப்பிடுவது டயட்டுக்கு நல்லதல்ல. எனவே, உணவு கட்டுப்பாடு என்பது டயட்டில் முக்கியம். ஆனால், நான் கலோரி கணக்கெல்லாம் பார்ப்பதில்லை.
இத்தனை கிராம் சால்மன் மீன் தான் சாப்பிட வேண்டும் என்று கணக்கிடு நான் சாப்பிடும் ஆள் கிடையாது. என் உடலுக்கு எவ்வளவு பசிக்கிறதோ, அள்ளவு சாப்பிடுவேன் ஒவ்வொருவர் உடலுக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். நம் உடலை நாம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப, செயல்பட வேண்டும். நான் எப்போது மகிழ்ச்சியாக இருப்பேன். மன அழுத்தம் கிடையாது. இதனால், எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு எனக்கு இல்லை” என்று கூறினார்.
உடல் எடையை குறைப்பவரா?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் அதிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, எண்ணெய் பொருட்கள். இனிப்பு பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், ஸ்வீட், பஜ்ஜி, போன்டா போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி உணவில் ப்ரோட்டீன், நார்ச்சத்து போன்ற சரிவிகித அளவில் இருக்க வேண்டும். தினமும் ஒரு நாளைக்கு 5 முட்டைகள் வரை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவு மட்டுமில்லாமல், தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஜிம்மிற்கும் செல்லலாம். ஜிம்மிற்கு செல்ல முடியாதவர்கள், தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் போதும். இதன் மூலம், உங்கள் உடல் எடையை நீங்கள் எளிதாக குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் டாப் 5 உணவுகள்.. இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க
மேலும் படிக்க: நீரிழிவு நோயாளிகள்: இந்த 5 விஷயங்கள் ஃபாலோ பண்ணுங்க.. சுகர் லெவல் குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









