உடல் எடை குறைய டிப்ஸ்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஸியான வாழ்க்கை


இன்றைய பிஸியான வாழ்க்கையில் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. இன்று இருக்கும் பணிமுறை காரணமாக, மக்களின் உடல் செயல்பாடு குறைந்து விட்டது. உணவு முறையும் ஆரோக்கியமாக இல்லை. இன்று பலருக்கு உடல் பருமன் வேகமாக அதிகரிக்க இதுவே காரணம். அதேபோல், கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தை பிறந்த பிறகு, அவர்களின் எடையும் வேகமாக அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், அதிகரிக்கும் உடல் எடையை கட்டுப்படுத்த சரியான உணவு முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். ஆரோக்கியமாக சாப்பிடுவதன் மூலம், எடையைக் குறைக்கலாம், அது அதிகரிக்காமல் கட்டுப்படுத்தலாம். ஒரு பயனுள்ள எடை இழப்பு டயட் பிளான், அதாவது உணவுத் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


காலை நேர உணவு (மார்னிங் டயட்): நாளின் தொடக்கத்தில் வெறும் வயிற்றில் ஒரு நாள் வெந்தய நீரையும் ஒரு நாள் ஓம நீரையும் மற்றி மாற்றி குடிக்கவும். இந்த நீரை தயாரிக்க, இரவில் ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் / ஓமத்தை போட்டு ஊறவைக்கவும். மறுநாள் காலையில் வடிகட்டிய பிறகு அதே தண்ணீரைக் குடிக்கவும்.


ஊறவைத்த பாதாம்: இந்த வெந்தயம் அல்லது ஓம தண்ணீரை குடித்து அரை மணி நேரம் கழித்து, 5-6 ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சை சாப்பிடுங்கள்.


மேலும் படிக்க | ஆர்வ கோளாறுல அதிக விட்டமின் மாத்திரை சாப்பிடாதீங்க.. பேராபத்தை ஏற்படுத்தும்!


காலை உணவு: உடல் எடையை குறைக்க, பிரவுன் பிரட் சாண்ட்விச் அல்லது பல காய்கள் போட்டு செய்யப்பட்ட ஒப்புமா, இட்லி, தோசை ஆகியவற்றில் ஒன்றை காலை உணவில் சாப்பிடலாம். அல்லது ஒரு கப் பச்சை காய்கறி சாலட், பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றையும் உட்கொள்ளலாம். 


காலை உணவுக்குப் பிறகான டயட்: காலை உணவு சாப்பிட்ட 2-2:30 மணி நேரம் கழித்து சிறிது பழம் அல்லது லஸ்ஸி, மோர் அல்லது பழச்சாறு குடிக்கவும்.


மதிய உணவு: 2 மணி நேரம் கழித்து நீங்கள் மதிய உணவு சாப்பிடலாம். இதில் உள்ள உணவு ஒரு முழுமையான மற்றும் சீரான உணவாக இருக்க வேண்டும். அதில் பருப்பு, அரிசி, 1 ரொட்டி, ஒரு காய்கறி மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். சாதத்துக்கு சமமாக, பருப்பு வகைகள், காய்கறி, தயிர் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. அதிக எண்ணெய், காரம், மசாலா சேர்க்காத உணவை உட்கொள்வது சிறப்பாக இருக்கும். 


மாலை ஸ்நாக்ஸ் நேரம்: இதில் மாலையில் க்ரீன் டீ அல்லது பிளாக் டீ குடிக்கலாம். இதன் மூலம், உங்கள் எடை கட்டுக்குள் இருப்பதோடு, கொழுப்பும் குறையும். இதனை உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்கும்.


இரவு உணவு: காலையில் உட்கொள்ளும் உணவை விட எப்பொதும் இரவில் மிக லேசான உணவை உட்கொள்ள வேண்டும். இதில், பிரவுன் ரைஸ் (பகலை விட சற்று குறைவாக), பருப்பு, காய்கறிகள், ஒரு ரொட்டி அல்லது கிச்சடி கூட சாப்பிடலாம். ஆனால், தூங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டாம். இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் மஞ்சள் பால் அல்லது உலர் பழங்களுடன் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நோய்நொடிகளுக்கு எதிரியாகும் பழங்கள்! புரதச்சத்து உள்ள பழங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ