20 நாளில் தொப்பை குறைய.. டாப் 5 உடற்பயிற்சிகள்.. ட்ரை பண்ணுங்க

Belly Fat Reduction Exercise: தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் இந்த ஐந்து உடற்பயிற்சிகளை தினமும் வீட்டில் செய்யுங்கள். இதன் மூலம், உங்களால் ஈஸியாக தொப்பையை குறைக்க முடியும்.  

Written by - Umabarkavi K | Last Updated : Mar 2, 2026, 12:23 PM IST
20 நாளில் தொப்பை குறைய.. டாப் 5 உடற்பயிற்சிகள்.. ட்ரை பண்ணுங்க

Belly Fat Reduction Workout: உடல் பருமானால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.  உடல் பருமனால் பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதனால், உடல் எடையை குறைப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நமக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். 

Add Zee News as a Preferred Source

உடல் பருமன்

இதனால், தினமும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. ஆனால், உடல் எடையை குறைப்பது என்று அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.  இதற்கு விடாமுயற்சி மிகவும் அவசியமாக இருக்கிறது. இதற்கிடையில், பலருக்கு உடல் மெலிதாக இருக்கும். ஆனால், தொப்பை மற்றும் இடுப்பில் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து பெரிதாக காணப்படும். இதனால், தொப்பையை குறைக்க பலரும் முயற்சிப்பார்கள். 

ஆனால், தொப்பையை மட்டுமே கவனம் செலுத்தி குறைக்க முடியாது. ஒட்டுமொத்த உடலுக்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில், 20 நாளில்  தொப்பையை குறைக்க என்ன செய்யலாம், எப்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். மேலும், 20 நாளில் தொப்பையை குறைக்க சில உடற்பயிற்சிகளை ஜிம் கோச் ஒருவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பார்ப்போம்.

20 நாளில் தொப்பையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்

முதல் உடற்பயிற்சி: முதலில் நின்று கொண்டு  இரண்டு கைகளை முன்பக்கம்  நீட்ட வேண்டும். பின்பு, ஒவ்வொரு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் உங்கள் கைகளும் கீழ் பக்கம் சென்று மேலே உயர்த்த வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 30 முறை செய்ய வேண்டும். 

இரண்டாவது உடற்பயிற்சி:  நின்று கொண்டு, இரண்டு கைகளையும் உங்கள் வலது பக்கம் மற்றும் இடம் பக்கம் நீட்டிய வாறு நீட்ட வேண்டும். பின்பு, ஒரு கால்களை மேலே உயர்த்தி, அதே நேரத்தில் உங்கள் இரண்டு கைகளையும் கீழ்  காலின் கீழ் பக்கம் கொண்டு வந்து, உயர்த்த வேண்டும். இப்படியாக இரண்டு கால்களுக்கு இடையில் செய்ய வேண்டும். தினமும் 30 முறை இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

மூன்றாவது உடற்பயிற்சி: நின்று கொண்டு இரண்டு கைகளையும் தலையின் பின்பக்கம் வைத்துக் கொண்டு, வலது காலை மேலே (முட்டி உயரம் வரை) தூக்க வேண்டும். அதே நேரத்தில் இடது முழங்கையை வலது முழங்காலுடம் சேருமாறு உடலை சற்று மடக்க வேண்டும். பிறகு, மறுபக்கம் செய்ய வேண்டும். இப்படியாக மாற்றி மாற்றி 30 முறை செய்ய வேண்டும். இதனை  Standing Croess Knee Elbow Exercise என்று அழைக்கலாம்.

நான்காவது உடற்பயிற்சி: நின்று கொண்டு  இரண்டு கால்களையும் லேசாக விரித்து கொள்ள வேண்டும். பின்பு, இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, மெதுவாக முன்பக்கம் குனிந்து,  கைகளையும் கீழே கொண்டு வந்து தரையை தொட வேண்டும். மீண்டும் நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வர வேண்டும். இப்படியாக 30 முறை தினமும் செய்ய வேண்டும். இதனை standing Toe Touch Exercise என அழைக்கப்படுகிறது. 

ஐந்தாவது உடற்பயிற்சி: நின்று கொண்டு, இரண்டு  கால்களையும் லேசாக விரிக்க வேண்டும். பின்பு, இரண்டு கைகளையும் தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு, மெதுவாக வலது பக்கம் இடுப்பை வளைக்கவும். மீண்டும் நேரமாக வந்து இடது பக்க இடுப்பை வளைக்க வேண்டும்.  இவ்வாறு 30 முறை செய்யவும்.

 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

மேலும் படிக்க: கெட்ட கொழுப்பை அடித்து விரட்டும் பூண்டு: இப்படி சாப்பிட்டு பாருங்க

மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் டாப் 5 உணவுகள்.. இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News