மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது
எடைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் மதிய சாப்பாட்டுக்குப் பிறகு இந்த 3 விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது.
உடல் எடையை குறைப்பது பலருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்றைய வேகமான மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையில், எடையை அதிகரிப்பு என்பது அதிகமானோர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதனால், நோய் பரவலும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பாதிப்புகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் உடல் எடையை குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அதேநேரத்தில் உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுக்கோப்பாக இருப்பதும் அவசியம்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உணவுக்குப் பிறகு டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இல்லையென்றால் உங்கள் எடை அதிகரிக்கும். குறிப்பாக, மதிய உணவுக்குப் பிறகு அதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் உடல் எடையைக் குறைக்கும் உங்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது.
மேலும் படிக்க | டைப்2 நீரிழிவை கட்டுப்படுத்தும் காஃபி - நாளொன்றுக்கு எவ்வளவு காஃபி குடிக்கலாம்?
டீ மற்றும் காபியை தவிர்த்தல்
பலர் மதிய உணவுக்குப் பிறகு காபி குடிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், சாப்பிட்ட உடனேயே அமில உணவுகளை உட்கொள்வது அல்லது சாப்பிடுவது எரிச்சலூட்டும். மேலும், காபியில் உள்ள சர்க்கரை கலோரிகளை அதிகரிக்கிறது. இதன் விளைவாக எடை கூடுகிறது.
உணவுக்குப் பிறகு இனிப்புகளை உண்ணுதல்
சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு வகைகளை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் நல்லதல்ல. தினமும் உணவுக்குப் பிறகு இனிப்புகளைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். எனவே, உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | கீல்வாதம்: முதுமை வரும் முன்னே, மூட்டு வலி வந்துவிட்டதா, அறிகுறிகள், காரணங்கள் இதோ
தாமதமாக சாப்பிடுங்கள்
தாமதமாக சாப்பிடுவது உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிசிட்டியின் கூற்றுப்படி, மாலை 3 மணிக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு எடை குறையும் வாய்ப்பு குறைவு. எனவே சரியான நேரத்தில் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR