தினமும் இந்த தண்ணீரை குடிங்க; உடல் எடையை சீக்கிரமே குறையும்
Hing Water Benefits: நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த தண்ணீரை தினமும் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபடும் பெரும்பாலானோர் புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இப்போது உங்களுக்காக இதுபோன்ற ஒரு தீர்வை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், இது எடையை வேகமாக குறைக்க உதவும்.
பெரும்பாலான மக்கள் பெருங்காயத்தை பற்றி அறிந்திருப்பார்கள். சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் இந்த பொருள் நம் உணவை கூடுதலாக சுவையாக்க உதவுவதோடு, நம் உடல் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது. அதன்படி உங்கள் உடல் பருமனை பெருங்காயம் எவ்வாறு குறைக்கும் என்று நீங்கள் நினைத்தால் இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவும். அதேபோல் இந்த பெருங்காயம் உங்களின் உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலும் இது உதவியாக இருக்கும். எனவே உடல் எடையை குறைக்க பெருங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
பெருங்காய தண்ணீர் குடித்து வர பலன் கிடைக்கும்
எடையைக் குறைக்க பெருங்காய தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். பெருங்காய தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளை நாம் அன்றாட வாழ்க்கையில் சுலபமாக சமாளிக்க முடியும். அதன்படி பெருங்காய தண்ணீர் மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம். இந்த நிலையில், வெதுவெதுப்பான நீரில் பெருங்காய தண்ணீரை கலந்து உட்கொள்ளவும்.
இந்த பிரச்சனைகளும் பெருங்காய தண்ணீரால் நீக்கப்படும்
* வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்த, பெருங்காய தண்ணீரை உட்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் பெருங்காயத்தில் உடல் பருமனை தடுக்கும் பண்புகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
* இது தவிர, எந்த வகையான தலைவலியையும் பெருங்காய தண்ணீரால் குணப்படுத்தலாம். நீங்கள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை உணவில் சேர்த்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
* மாதவிடாய் வலியிலும் பெருங்காய தண்ணீர் சிறந்ததாக கருதப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக வலி இருந்தால், அவர்கள் பெருங்காய தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.
* நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், பெருங்காயத்தை கண்டிப்பாக ட்ரை செய்யவும். அதன்படி முதலில் ஒரு கிளாஸில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் பெருங்காயத்தை கலந்து குடிக்கவும். இது தவிர பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட்டை தயார் செய்து தொப்புளை சுற்றி தேய்ப்பது மற்றொரு வழியாகும். இப்படி செய்வதன் மூலம் செரிமானம் விரைவில் சரியாகும் என்பதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.
* பலர் வாய்வு தொல்லையால் சிரமம் படுகின்றனர். அத்தகைய நிலையில், கடுகு எண்ணெயுடன் பெருங்காயத்தை கலந்து தொப்புளைச் சுற்றி தேய்க்கவும். இப்படி செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR